Home /News /trend /

ஆண்டுக்கு 2 முறை பிறந்தநாள் கொண்டாடும் எலிசபெத் மகாராணி - காரணம் இதுதான்

ஆண்டுக்கு 2 முறை பிறந்தநாள் கொண்டாடும் எலிசபெத் மகாராணி - காரணம் இதுதான்

எலிசபெத் மகாராணி

எலிசபெத் மகாராணி

Queen Elizabeth | பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பிறந்த நாளை ஆண்டுக்கு இரண்டு முறை கொண்டாடும் பழக்கம்

    பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் 96ஆவது பிறந்தநாள்  ஏப்ரல் 21ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டிருக்கிறது. தனது தாய்வழி தாத்தா வீட்டில் கடந்த 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பிறந்தவர் எலிசபெத். ராணியாக மகுடம் சூட்டியதில் இருந்து ஆண்டுக்கு இருமுறை பிறந்தநாள் கொண்டாடி வருகிறார் இவர். எலிசபெத் மகாராணியின் உண்மையான பிறந்தநாள் ஏப்ரல் 21ஆம் தேதி தான் என்றாலும் கூட, பிரிட்டன் மக்களுடன் அலுவல்பூர்வமான பிறந்தநாள் விழா ஒன்றை இவர் ஜூன் மாதத்தில் கொண்டாடுவார். பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பிறந்த நாளை ஆண்டுக்கு இரண்டு முறை கொண்டாடும் பழக்கம் முதன் முதலாக கடந்த 1748ஆம் ஆண்டு இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது.

    பருவ காலங்களை மையமாக வைத்து ஆண்டுக்கு இரண்டு முறை பிறந்தநாள் கொண்டாடும் பழக்கத்தை அறிமுகம் செய்தவர் அவர் தான். அதாவது, நவம்பர் மாதத்தில் தனிப்பட்ட முறையில் பிறந்தநாள் கொண்டாடும் அவர், மீண்டும் மக்களுடன் ஜூன் மாதத்தில் பிறந்தநாள் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஜூன் மாதம் என்பது கோடைகாலம் ஆகும். 1760ம் ஆண்டு இறக்கும் வரையில் இரண்டாம் ஜார்ஜ் மன்னர் ஆட்சி செய்தார். இதற்குப் பிறகு அரியணை ஏறும் ஒவ்வொரு நபரும் அதே பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர். கடந்த 1952ஆம் ஆண்டு மகாராணியாக எலிசபெத்திற்கு மகுடம் சூட்டப்பட்டது.

    அணிவகுப்பு மற்றும் ராஜ மரியாதை : கோடை காலத்தில் கொண்டாடப்படும் பிறந்தநாள் என்பது ‘வண்ணமயமான திருவிழா’ என்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில் பிரிட்டன் அரச வம்சத்தைச் சேர்ந்த 1,400 வீரர்கள் அணிவகுப்பு நடத்துகின்றனர். சுமார் 400 இசையமைப்பாளர்களின் இசை, 200 குதிரைகள் இந்த அணிவகுப்பில் இடம்பெறும்.

    Also Read : ஆந்திராவில் கிராம மக்களுக்கு 2 வாரம் லாக்டவுன்... கொரோனாவை விட கொடிய காரணம்

    பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக குதிரை சாரட் வண்டியில் வெள்ளை மாளிகைக்கு மகாராணி எலிசபெத் வந்து இறங்குவார். அங்கு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். இதற்குப் பிறகு சாரட் வண்டியில் மீண்டும் பங்கிங்காம் அரண்மனைக்கு சென்று விடுவார். அங்கு குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பால்கனியில் அமர்ந்து கொண்டு ராயல் விமானப் படை வீரர்களின் விமான சாகச கண்காட்சியை பார்வையிடுவார். இதுமட்டுமல்லாமல் அவரது பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 41 குண்டுகள் முழங்க துப்பாக்கிகள் வெடிக்கும்.

    கொரோனாவால் கொண்டாடவில்லை: கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி மீண்டும் மிக பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 1952ஆம் ஆண்டில் ராணியாக பதவியேற்ற நிலையில், இந்த ஆண்டு அவரது அலுவல்பூர்வமான பிளாட்டினம் ஆண்டு (75ஆவது ஆண்டு) பிறந்தநாள் விழாவாக இருக்கும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி