ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பாபா ராம்தேவ்விற்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம் - நடந்தது என்ன?

பாபா ராம்தேவ்விற்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம் - நடந்தது என்ன?

பாபா ராம்தேவ்விற்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம்

பாபா ராம்தேவ்விற்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்தார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான என்று பாபா ராம்தேவ் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பாபா ராம்தேவ்விற்கு எதிராக அலோபதி மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்தார். மேலும் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிடவும் அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் என்றும் பேசியிருந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியானது. பாபா ராம்தேவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த இந்திய மருத்துவ சங்கம், கருப்பு தினத்தை கடைபிடித்தது.

மேலும் 1897ம் ஆண்டு தொற்றுநோய்கள் சட்டத்தின் படி ராம்தேவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க இந்திய மருத்துவ சங்கமும், பிற பிரபல நிறுவனங்களும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இத்தகைய அவதூறான கருத்துக்கள் மருத்துவ ஊழியர்களின் கடின உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இதுபோன்ற அறிக்கைகள் முழு நாட்டிற்கும் பீதியை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நியூஸ் 18 உடன் பேசிய ஐ.எம்.ஏ.வின் நேஷனல் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், “நாடு இத்தகைய தொற்றுநோயை எதிர்த்து போராடி கொண்டிருக்கும் நேரத்தில் தவறான எந்தவொரு அறிக்கையையும் யாரும் வெளியிடக்கூடாது, யாராவது இதனை மீறினால் அவர்களுக்கு எதிராக சில உடனடி நடவடிக்கை தேவை" என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே பாபா ராமதேவிற்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் ஐ.எம்.ஏ உடன் அகில இந்திய மருத்துவ சங்கம் (ஃபைமா), ஜூனியர் டாக்டர்கள் சங்கம் (ஜே.டி.ஏ), ரெசிடெண்ட் மருத்துவர்கள் சங்கங்கள் (RDA கள்) மற்றும் யுனைடெட் ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கங்கள் (யுஆர்டிஏக்கள்) 2021 ஜூன் 1ம் தேதி நாடு தழுவிய ‘கருப்பு நாள்’ என அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படாமல், மருத்துவமனைகளுக்குள் இந்த அமைதியான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர்களும் பிற மருத்துவ ஊழியர்களும் கருப்பு ரிப்பன் அணிந்தும் மற்றும் ‘உடைகளில் பிளாக் டே’ என்று எழுதியும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் ‘Arrest Ramdev’என்ற ஹேஷ்டேக்-கில் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

Also read... இங்கிலாந்தில் நீக்கப்படும் "தடுப்பூசி பாஸ்போர்ட்" திட்டம்? அறிக்கை வெளியீடு!

தற்போது கோவிட் -19ஐ எதிர்த்துப் போராடுவதால் கடுமையான எதிர்ப்புக்களை எடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் சங்கங்கள் முடிவு செய்திருந்தன. இதுகுறித்து மருத்துவ சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மருத்துவர்கள் குறித்தும், அலோபதி மருத்துவம் குறித்து ஒழுங்கீனமான வகையில் கருத்து தெரிவித்த ராம்தேவைக் கண்டித்தும் கருப்பு தினத்தை அனுசரிக்க முடிவு செய்துள்ளோம், எனினும் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி சிகிச்சை நடைபெறும். அவர் தான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தன.

ஐ.எம்.ஏ-ஜே.டி.ஏ-வின் உ.பி. மாநில ஒருங்கிணைப்பாளரான ஜூனியர் டாக்டர் ஹர்ஷ் ராய் இதுகுறித்து கூறுகையில், “எங்கள் சகோதரத்துவத்திற்கு செய்யப்பட்டுள்ள இந்த அநீதியால் நாங்கள் மிகுந்த வருத்தப்படுகிறோம், ஆனால் இந்த தோற்றுநோய் காலங்களில் நோயாளிகள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த கோவிட் -19 தொற்றுநோயை முறியடிக்க மருத்துவர்கள் செய்யும் மிகப் பெரிய தியாகத்தை இந்த தேசத்தில் வாழும் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று அவர் கூறினார். பாபா ராம்தேவ் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என மருத்துவ சங்கத்தினரும் கூறி வருகின்றனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Baba Ramdev