Home /News /trend /

பேனாவின் மூடிகளில் துளை இருப்பது ஏன்? உயிரை காப்பாற்றும் ஆச்சரிய காரணம்

பேனாவின் மூடிகளில் துளை இருப்பது ஏன்? உயிரை காப்பாற்றும் ஆச்சரிய காரணம்

பேனாவின் மூடிகளில் துளை இருப்பது ஏன்?

பேனாவின் மூடிகளில் துளை இருப்பது ஏன்?

Pen Caps | பேனா மூடியை கடிக்கும் பழக்கம் உடைய நபர்களின் பாதுகாப்பு கருதி தான் இந்த துளை வைக்கப்படுகிறது. கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா?

    இன்றைய 2K கிட்ஸ்களின் சிந்தனை பெரும்பாலும் ஸ்மார்ட்ஃபோன்களை நோக்கி இருப்பதால், அவர்களுக்கு இந்த அனுபவம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், 90ஸ் கிட்ஸ் மற்றும் அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவர்கள் நிச்சயமாக இந்த அனுபவத்தை கடந்து வந்திருக்கக் கூடும்.

    ஒரு பேப்பர் அல்லது நோட் எடுத்துக் கொண்டு எதையேனும் எழுத தொடங்குகையில், பால்பாயிண்ட் பேனா மூடியை வாயில் வைத்து கடித்து கொண்டே பலத்த சிந்தனையில் ஆழ்ந்து விடுவோம். அப்படி கடித்த பேனா மூடியின் மேல் சிறு துளை இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது ஏன் மூடியில் துளை வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒரு நாளாவது நீங்கள் சிந்தித்து பார்த்தது உண்டா? உங்கள் நண்பர்களிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டீர்கள் என்றால் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு பதிலை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

    பல்வேறு யூகங்கள்…

    பால்பாயிண்ட் பேனா மூடிகளில் ஏன் துளை இருக்கிறது என்பதற்கு பின்வரும் விளக்கங்களை பலர் சொல்லியிருக்க கூடும். பேனா மீது பிரசரை சரி சமமாக வைத்துக் கொள்ள இது உதவும் என்றும், துளை இருந்தால் திறப்பதற்கு வசதியாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால், பல பேனா மூடிகளை மிக எளிமையாக நாம் திறந்துவிட முடியும் என்பதால், இந்த பிரசர் என்ற தியரி ஒத்து வரவில்லை.

    பால்பாயிண்ட் முனையில் உள்ள இங்க் காய்வதற்காக இந்த துளை விடப்பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இது ஓரளவுக்கு உண்மையானது என்றாலும் கூட, துளை வைத்திருப்பதற்கான முழு காரணம் வேறானது.

    உண்மை இதுதான்…

    நம்மைப் போல பேனா மூடியை கடிக்கும் பழக்கம் உடைய நபர்களின் பாதுகாப்பு கருதி தான் இந்த துளை வைக்கப்படுகிறது. கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், உண்மைதான். பேனா மூடியை பழக்க தோஷத்தில் கடித்துக் கொண்டிருக்கும் நபர்கள், அதை ஏதேச்சையாக விழுங்கி விட்டால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

    Also Read : ஹோட்டல் ரூமில் தூங்கிய போது நிகழ்ந்த விபரீதம் - காது கேட்காததால் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்த நபர்!

    பேனா மூடியை விழுங்கினால் உயிர் போய் விடுமா என்று நீங்கள் அதிர்ச்சியுடன் எதிர்கேள்வி எழுப்பலாம். ஆனால், உண்மையில் உயிர் பாதுகாப்பு கருதி தான், பேனா தயாரிப்பதில் பழமையான நிறுவனமாகக் கருதப்படும் பிஐசி நிறுவனம் மூடிகளில் துளையை வைத்தது.

    உதாரணத்திற்கு, பேனா மூடியை நீங்கள் விழுங்கி, அதை உங்கள் மூச்சுக்குழாயை அடைத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம், அந்த சமயத்திலும் கூட உங்களுக்கு மூச்சுக்காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த துளை வைக்கப்படுகிறது.

    பேனா மூடி மூச்சுக் குழாயில் சிக்கினால் சாதாரணமான பிரச்சினை தான் என்று நீங்கள் கருதக் கூடும். ஆனால், நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் சிக்கலை ஏற்படுத்தும் இந்த விஷயம், சில சமயங்களில் உயிரையும் பலி வாங்கிவிடும்.

    கடந்த 2018ஆம் ஆண்டில் ஆந்திராவில் 8 வயது சிறுவன் பேனா மூடியை விழுங்கியதால் உயிரிழந்தான். இதேபோல, 13 வயது பள்ளி மாணவரும் பேனா மூடியை விழுங்கியதால் பலியானார். பேனா மூடியில் இருக்கும் துளை உங்கள் உயிரை காக்கும் என்றாலும், அதை நீங்கள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Viral

    அடுத்த செய்தி