Home /News /trend /

ஆளையே விழுங்கும் முதலையால் ஏன் மென்று சாப்பிட முடியவில்லை தெரியுமா?

ஆளையே விழுங்கும் முதலையால் ஏன் மென்று சாப்பிட முடியவில்லை தெரியுமா?

முதலை

முதலை

பல நீர்நிலைகளில் முதலைகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இழுத்துச் சென்ற பல கதைகளையும் வீடியோக்களையும் பார்த்து இருக்கிறோம்.

  பார்ப்பதற்கு கொஞ்சம் அச்சுறுத்தக்கூடிய விலங்குகளில் முதலையும் ஒன்று. முதலையை நேராக எங்க பார்த்தாலும் சரி, அதாவது முதலைப்பண்ணை அல்லது விலங்கியல் பூங்கா என்று எங்கு பார்த்தாலும் பாதுகாப்பான தொலைவில் இருப்பது மிகவும் அவசியம். பல நீர்நிலைகளில் முதலைகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இழுத்துச் சென்ற பல கதைகளையும் வீடியோக்களையும் பார்த்து இருக்கிறோம். சமீபத்தில் கூட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை முதலை தாக்கியதால் இறந்துபோன செய்தி வைரலாக பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் முதலை ஒருவரை தாக்கி மொத்தமாக விழுங்கிவிடும். மற்ற விலங்குகளைப் போல முதலையால் உணவை மென்று அசை போட்டு சாப்பிட முடியாது இதற்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.

  முதலையின் தோற்றம் எவ்வாறு அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறதோ அதேபோல முதலையின் பற்களும் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும். கூரான பற்கள் இருந்தாலும் முதலையால் எந்த உணவையும் கடித்து தின்ன முடியாது. விலங்குகளை உதாரணமாக எடுத்துக்கொண்டால், மாடு அசை போட்டு உண்பதை பலரும் பார்த்திருப்பீர்கள். இவ்வளவு பற்கள் இருந்தும் முதலையால் மற்ற விலங்குகளைப் போல உணவை வாய்க்குள்ளேயே கடித்து முழுங்க முடியாது. முதலையின் வாய் மற்றும் தாடையின் அமைப்பு தான் இதுக்கு காரணம்.

  முதலையின் வாயை பெரிதாக மேலும் கீழுமாக திறக்க முடியுமே தவிர பக்கவாட்டில் முதலையுடைய தாடைகள் நகருமாறு, அசையுமாறு அமையவில்லை. எனவே முதலைகளால் மேல் புறமாக வாயைத் திறந்து ஒரு பொருளை விழுங்க முடியும், கடிக்க முடியாது.   

  எல்லா வகையான முதலில் முதலைகளும் மாமிச உண்ணி, அதாவது பூச்சிகள் முதல் பறவைகள், மீன், தவளை என்று அனைத்து உயிரினங்களையும் சாப்பிடக்கூடியவை. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய இனத்தைச் சேர்ந்த முதலைகளையே சாப்பிடும் முதலைங்களும் உள்ளன.

  முதலையால் கடிக்க முடியவில்லை என்றாலும் அது எந்த ஒரு விலங்கையோ அல்லது அதன் உணவாக எதை பிடித்துக் கொள்கிறதோ, அதனை தன்னுடைய உறுதியான மற்றும் வலுவான தாடைகளால் தப்பிவிட முடியாத உடும்புப்பிடி என்று கூறும் அளவுக்கு பிடித்துக்கொள்ளும். இயற்கையாக நீர்நிலைகளில் மற்றும் காட்டுப் பகுதிகளில் வாழும் முதலை இவ்வாறு சாப்பிடும். பூங்கா, வனவிலங்கு சரணாலயம் ஆகிய இடங்களில் வளர்க்கப்படும் முதலைகளுக்கு இறந்த மீன், எலி ஆகியவை உணவுகளாக வழங்கப்படும்.

  Also Read : ஓனரை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுத ஆடு... கல்லான மனதையும் கலங்க வைக்கும் வீடியோ

  முதலைகளுக்கு நான்கு வயிற்றுப் பகுதி உள்ளது. அதாவது நான்கு வயிறுகள் இருக்கிறது என்றே கூறலாம். இந்த நான்கு வயிறுகளும் முழுதாக முதலை சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய உதவுகிறது. மற்ற விலங்குகளைப் போல அல்லாமல் முதலையின் வயிற்றில் எக்கச்சக்கமான காஸ்ட்ரிக் அமிலம் சுரக்கும். நெருப்புக் கோழியைப் போலவே முதலையும் சிறு சிறு கூழாங்கற்களை விழுங்கும் பழக்கம் கொண்டுள்ளது என்று மியாமி சயின்ஸ் மியூசியத்தில் கூறியுள்ளனர்.  முதலை ஒரு பெரிய அளவிலான விலங்கை சாப்பிட்டால், பல நாட்களுக்கு உணவு தேவைப்படாது. வயிற்றில் இருக்கும் உணவு முழுவதுமாக செரிமானமாகும் வரை, முதலை எதுவும் செய்யாமல் ஓய்வு எடுக்கும் என்று உயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Crocodile, Trends, Viral

  அடுத்த செய்தி