பலரும் பயப்படக் கூடிய பூச்சி இனங்களில் ஒன்று தான் கரப்பான்பூச்சி. கரப்பான்பூச்சி பொதுவாக எல்லா வீடுகளிலும் காணப்படும். வீடு சுத்தமில்லாமல் இருந்தால் கரப்பான்பூச்சி கட்டாயமாக அந்த இடத்தில் இருக்கும். அதாவது அழுக்கு இருக்கும் இடத்தில்தான் கரப்பான்பூச்சி வசிக்கும். எனவே கரப்பான் பூச்சிகள் வீட்டில் இருப்பது என்பது நோய்க்கான அறிகுறி என்று கூறலாம். வீட்டில் கரப்பான் தென்பட்டாலே நோய் வரும் அபாயம் இருப்பதாக பலரும் கூறுவார்கள்.
ஆனால், வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொண்டாலும் கரப்பான்பூச்சி அவ்வப்போது வீட்டுக்குள் வருவது அல்லது வீட்டுக்குள் தென்படுவதை தவிர்க்க முடியாது. பல இடங்களில் அந்த வீட்டில் இருக்கும் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல கரப்பான்பூச்சிகளும் வாழ்ந்து கொண்டிருப்பதையும் காண முடியும். கரப்பான்பூச்சிகளை ஒழிப்பதற்கு, ஸ்ப்ரே முதல் தீவிரமான பெஸ்ட் கண்ட்ரோல் சேவைகள் வரை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் முழுமையாக கரப்பான்பூச்சியைப் பற்றி சுவாரஸ்யமான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கரப்பான்பூச்சிக்கு மீசை இருப்பதை பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் கரப்பான் பூச்சிக்கு இரண்டு இறக்கைகளும் உள்ளன. இறக்கைகள் இருக்கும் உயிரினங்கள் எல்லாமே பறக்கும் தன்மை கொண்டவை. ஆனால் கரப்பான் பூச்சிகளால் பறக்க முடியாது இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
Also Read :
ட்விட்டர் நிறுவனத்தை அலற விட்ட எலான் மஸ்க்... நோட்டீஸ் அனுப்பி பகிரங்க எச்சரிக்கை!
எல்லா பூச்சியினங்களுக்கும் இருப்பது போலவே கரப்பான்பூச்சிக்கும் நரம்பு மண்டலம் இருக்கிறது. இந்த நரம்பு மண்டலம் கரப்பான்பூச்சி பறப்பதற்கும் இயங்கவும் உதவுகிறது. கரப்பான்பூச்சிகள் பறப்பதற்கு ஏற்றவாறு உடல் அமைப்பும் இறக்கைகளும் இருந்தாலும் உடல் எடை அதிகமாக இருப்பதன் காரணத்தால் அவற்றால் பறக்க முடியாது. அதாவது கரப்பான்பூச்சியின் இறக்கையை விட உடல் எடை மிகவும் அதிகம். எனவே தனது உடல் எடையை சுமந்து கொண்டு கரப்பான்பூச்சிகள் நீண்டதூரம் பறக்க முடியாது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குதிப்பது போல தான் கரப்பான்பூச்சி பறக்கும். ஆனால், நிபுணர்களின் கருத்துப்படி, கரப்பான் பூச்சிகள் மணிக்கு 5 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடும்.
கரப்பான் பூச்சி பற்றி வேறு சில சுவாரஸ்யமான தகவல்கள்:
கரப்பான்பூச்சி பற்றி பெரும்பாலானவர்கள் அறியாத வேறு சில தகவல்களும் உள்ளன. இந்த பூச்சிகள் தண்ணீருக்குள் தனது மூச்சை பிடித்தவாறு 40 நிமிடங்கள் வரை உயிர்வாழும்.
அது மட்டுமின்றி உணவு தண்ணீர் என்று எதுவுமே இல்லாமல் மூன்று மாதங்கள் வரை கரப்பான்பூச்சியால் உயிர் வாழ முடியும்.
கரப்பான்பூச்சிகள் தலை துண்டிக்கப்பட்டாலும் பல வாரங்களுக்கு உயிருடன் இருக்கும். ஆனால் இந்த தகவல் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். அவை உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒரு சிலர் இளம் வயதில் கர்ப்பான் பூச்சி தலையை வெட்டி கூட பார்த்திருப்பீர்கள்.
மனிதர்கள் உயிர்வாழும் கலையை மேம்படுத்தி கொண்டே வருவது போல பூச்சி இனங்களும் விலங்கினங்களுக்கும் உயிர் வாழும் திறன்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.