Home /News /trend /

'இந்து கோவில்களை பாதுகாக்க குரல் எழுப்பிய பவன் கல்யாண் ' - இணையத்தில் அதிகம் பகிரப்படும் வீடியோ

'இந்து கோவில்களை பாதுகாக்க குரல் எழுப்பிய பவன் கல்யாண் ' - இணையத்தில் அதிகம் பகிரப்படும் வீடியோ

 பவன் கல்யாண்

பவன் கல்யாண்

பொதுமக்கள் கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இந்துக் கோயில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.

    இது ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தால், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை ஏன் அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது? என இந்து கோவில்களை பாதுகாக்க பவன் கல்யாண் குரல் எழுப்பியுள்ளார்.

    ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அம்மாநில அரசின் ஆட்சியை விமர்சனம் செய்துள்ளார். பொதுமக்கள் கூட்டத்தில் பேசிய அவர், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இந்துக் கோயில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார். இந்துக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கக் கோரியுள்ளார்.

    இது ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தால், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை ஏன் அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது? என இந்து கோவில்களை பாதுகாக்க பவன் கல்யாண் குரல் எழுப்பியுள்ளார். 2024-ல் ஜே.எஸ்.பி ஆட்சிக்கு வந்து மக்கள் ஆட்சியை அமைக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

    ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் கடந்த காலங்களில் இந்து கோவில்களை பாதுகாக்க பலமுறை குரல் எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2020 டிசம்பரில், மாநிலத்தில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய அவர், இந்து மதத்தின் மீதான தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று கூறியிருந்தார். மேலும், செப்டம்பர் 2020 இல், கல்யாண் தலைமையிலான ஜேஎஸ்பி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாட்டாளர்கள் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கோவில் தேர் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் உள்ள ஸ்ரீ லட்சுமிநரசிம்ம ஸ்வாமி கோவிலில் தேர் எரிக்கப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்து தர்மத்தைப் பாதுகாக்க பாடுபடுமாறும் கட்சித் தொண்டர்களுக்கு இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்தனர்.



    இதற்கிடையில், மார்ச் 14 அன்று கல்யாண், YSRCP அரசாங்கம் மாநிலத்தை கடனில் மூழ்கடிப்பதாக குற்றம் சாட்டினார். மாநிலம் ₹7 லட்சம் கோடி கடனில் மூழ்கியுள்ளது என்றும், ஆந்திராவை கடனற்ற மாநிலமாக்குவதே ஜேஎஸ்பியின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.



    2024 ஆம் ஆண்டில் ஜேஎஸ்பி ஆட்சி அமைக்கும் என்றும், கட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவாக நிற்பவர்களின் உரிய ஆதரவுடன் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Hindu Temple

    அடுத்த செய்தி