அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மது அருந்துவதைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு ஆய்வுகள் காட்டினாலும், நம்மில் பலர் மது அருந்துவதைத் தொடர்கிறோம். ஆல்கஹால் பற்றி பேசும்போது, பீர் பாட்டில்கள் ஏன் எப்போதும் பச்சை அல்லது பழுப்பு நிறமாக இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது பலரும் யோசிக்காத கேள்வியாக இருந்தாலும் இதற்கான பதில் பற்றி பலரும் அறிந்திராததாக இருக்கும்.
பச்சை அல்லது பழுப்பு நிற பீர் பாட்டிலுக்குப் பின்னால் ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தில் பீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன. இதில் தான் பீர் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது. அப்போதில் இருந்து தான் பீர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், இந்த வெளிப்படையான பாட்டில்களில் சூரிய ஒளி ஊடுருவியபோது, ஒளியில் இருக்கும் புற ஊதா கதிர்கள் காரணமாக உள்ளே உள்ள அமிலம் வேகமாக செயல்படுவதை பீர் தயாரிப்பாளர்கள் கவனித்தனர். இதன் காரணமாக, பீரை பாட்டிலில் அடைத்து விற்க தொடங்கினர். அப்போது மக்களுக்கு இது பிடித்த ஒன்றாக மாறி விட்டது.
இருப்பினும் சில விரைவில் பீர் கெட்டு போய் விடுவதால், மக்களுக்கு பீர் பாட்டில்கள் மீது அதிருப்தி வந்து விட்டது. இதனால், பீர் நிறுவனங்கள் பாதிக்கப்படத் தொடங்கியபோது, அவர்கள் இந்த சிக்கலை தீர்க்க பல முறைகளை முயற்சித்தனர், ஆனால் முடியவில்லை. இறுதி முயற்சியாக பாட்டில் நிறத்தை பழுப்பு நிறமாக மாற்ற முயற்சித்தனர். இந்த வழிமுறை வேலை செய்தது. பழுப்பு நிற பாட்டில்களில் வைத்திருந்த பீர் கெட்டுப் போகவில்லை. சூரிய ஒளி பாட்டிலில் உள்ள திரவத்தை அடையாததே இதற்குக் காரணமாக இருந்தது.
Also Read : மாணவியை விசிறி விட சொல்லி வகுப்பறையில் நிம்மதியாக தூங்கிய அரசு பள்ளி ஆசிரியை
இதற்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் நடந்தவுடன், பீர் நிறுவனங்களுக்கு மற்றொரு சிக்கல் ஏற்பட்டது. அப்போது, பழுப்பு நிற பாட்டில்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், பீர் நிறுவனங்கள் பச்சை நிறத்தில் உள்ள புதிய நிறத்தை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே பச்சை நிறத்தை தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தனர். இது பழுப்பு நிறத்தில் ஏற்பட்ட தட்டுபாடால் உண்டான மாற்றமாக இருந்தது.
சூரிய ஒளியை உள்ளே பீர் அடையாமல் தடுப்பதில் அற்புதமாக வேலை செய்த மற்றொரு நிறம் பச்சை நிறம். எனவே, பச்சை மற்றும் பழுப்பு நிற பாட்டில்கள் சூரிய ஒளியை வெளியேற்றவும், பீர் புதியதாக இருக்கவும் இந்த நிற பாட்டில்களை பயன்படுத்தி வருகின்றனர். பீர் இது போன்று கெட்டு போகாமல் இருக்க தான் தயாரிப்பாளர்கள் இப்படியொரு வித்தியாசமான வழியை பின்பற்றி வருகின்றனர். பீரை பாட்டிலில் குடித்தால் தான் பலருக்கும் அது சிறந்த உணர்வை தருவதாகவும் கூறுகின்றனர். குறிப்பாக பீர் பிரியர்களுக்கு பீர் பாட்டிலை வாங்கி அடுக்கி வைப்பதும் ஒரு பழக்கமாக செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.