ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் தெரியுமா?

ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் தெரியுமா?

கோப்ப படம்

பொதுவாக ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சிறு, சிறு விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமல் இருக்கலாம்.

 • Share this:
  ஏப்ரல் 16, 1853 அன்று, இந்திய ரயில்வே தனது சேவைகளைத் தொடங்கியது, முதல் ரயில் மும்பையிலிருந்து தானே வரை 33 கி.மீ தூரத்தில் பயணித்தது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்திய ரயில்வே துறையில், ரயில் பெட்டிகள் மீது மஞ்சள், வெள்ளை, பச்சை நிறத்தில் கோடுகள் இருப்பதற்கும் தனிப்பட்ட காரணம் உள்ளது.

  இந்திய ரயில்வே பயணிகளின் போக்குவரத்தில் பெரும் பங்களிப்பை பெற்றது. 1951 இந்திய ரயில்வே தேசிய மையமாக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் மற்றும் உலகின் 2-வது பெரிய நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது.

  பொதுவாக ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சிறு, சிறு விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமல் இருக்கலாம். அதில் ஒன்று தான் ரயில் பெட்டிகளின் ஜன்னல் மீது இருக்கும் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள். இந்த கோடுகள் எதை அடையாளப்படுத்துகிறது என பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  இந்தியாவில் இயக்கப்படும் விரைவு வண்டிகள், அதிவிரைவு வண்டிகள் நீலநிறங்களில் இருக்கும். இந்த நீலநிற ரயில் பெட்டிகளின் ஜன்னல் மீது வெள்ளைக் கோடு இருந்தால் முன்பதிவு இல்லாத (unreserved coach) பெட்டிகள் என்று அர்த்தம். மஞ்சள் நிற கோடுகள் இருந்தால் மாற்றுத்திறனாளி மற்றும் உடல்நலம் முடியாதவர்களுக்கு சிறப்பு பெட்டி என்று அர்த்தம். இதேப்போன்று பச்சை மற்றும் கிரே நிறத்தில் கோடுகள் இருந்தால் அது மகளிருக்கான சிறப்பு பெட்டிகளாகும்.  ரயிலில் பயணிக்கும் பயணிகள் வசதிக்காக இந்திய ரயில்வே இதுப்போன்ற அடையாளங்களை ரயில் பெட்டிகள் பயன்படுத்துகின்றன.
  Published by:Vijay R
  First published: