அரசு பேருந்தாக இருந்தாலும் சரி, இரயிலாக இருந்தாலும் சரி - பயணமும், ஜன்னல் ஓரமும் ஒன்று சேர்ந்தாலே அலாதி தான். ஜன்னல் ஓரம் சீட்டு கிடைப்பதை சிலர் போன ஜென்மத்து புண்ணியம் என்கிற அளவிற்கு கொண்டாடுவர்; சிலர் படுத்து குறட்டை விட்டு தூங்குவார். பேருந்து மற்றும் இரயில்களில் மட்டுமல்ல "இது" விமானங்களில் நடக்கும்.
விமானத்தின் ஜன்னல் ஒர இருக்கையில் அமர்ந்தபடி பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து நிலத்தையும், கடலையும் பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது. இதன் காரணமாகவே நம்மில் பலரும் விமானத்தில் பயணம் செய்யும் போது ஜன்னல் இருக்கைகளை பெரிதும் விரும்புகிறோம். ஆனால் எப்போதாவது யோசித்தது உண்டா? விமான ஜன்னல்கள் ஏன் கட்டமாக இல்லாமல் வட்டமாக உள்ளதென்று? விமானத்தில் பயணம் செய்த அனைவருமே இதை கவனித்து இருப்போம்; ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே அதற்காக பதில் / காரணம் தெரியும். ஒருவேளை உங்களுக்கு அது பற்றிய தெளிவு இல்லை என்றால், வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
விமான ஜன்னல்கள் ஏன் வட்டமாக உள்ளன?
இதற்கான பின்னணியில் இருக்கும் காரணம் தான் என்ன? இதற்கும் விமான பாதுகாப்பிற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? வாருங்கள் ஆராய்வோம்.
ஸ்டஃப் வொர்க்ஸ் இணையதளத்தின் படி, விமானத்தின் ஜன்னல் இருக்கைகள் 1950கள் வரை சதுரமாகவே இருந்தன. விமான பயணங்கள் படிப்படியாக பிரபலமடைந்ததால், செலவை குறைக்கும் நோக்கங்களுக்காக விமான நிறுவனங்கள் அதிக உயரத்தில் பறக்கத் தொடங்கின.
Also Read : Smartphone கையாளும் விதத்தை வைத்தே உங்கள் குணத்தை அறியலாம்!!
விமானங்களை அதிக உயரத்தில் பறக்கச் செய்ய வேண்டும் என்றால், அதிக அழுத்தத்தை சந்திக்க வேண்டும். இதன் காரணமாக, விமானத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள அழுத்த வேறுபாடுகள் அதிகரித்து அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது. 1953 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் வணிக ரீதியான விமானங்கள் (டி ஹவில்லேண்ட் காமெட்ஸ், முதல் ஜெட் விமானம்) நடுவானில் சிதைந்தபோது, குறிப்பிட்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும் அதிக உயர்த்திலான விமான பயணத்தில் உள்ள ஆபத்துகள் நிரூபிக்கப்பட்டது. டி ஹாவில்லேண்ட் காமெட்ஸின் கடைசி விமானம் செப்டம்பர் 1981 இல் பறந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒருகட்டத்தில், இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு காரணம் விமானங்களில் உள்ள சதுர வடிவிலான ஜன்னல்கள் தான் என்பது கண்டறியப்பட்டது. இந்த சோகமான நிகழ்வுகள் பொறியாளர்களை புதிய கண்ணோட்டத்துடன் ஜன்னல் வடிவமைப்புகளை சிந்திக்க தூண்டியது.
சதுர ஜன்னல்களின் கூர்மையான விளிம்புகள் காரணமாக, விமானத்தில் இயற்கையாகேவ பலவீனங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன் விளைவாக மெட்டல் ஃபிடெக் (metal fatigue) தோல்வியும் ஏற்படுகிறது என்பதை பொறியாளர்கள் கண்டறிந்தனர். அதிக உயரத்தில், காற்று அழுத்தத்தின் விளைவாக குறிப்பிட்ட ஜன்னல் மூலைகளின் பலவீனம் மேலும் துரிதப்படுத்தப்படுகிறது. இந்த விரைவாக சதுர வடிவிலான ஜன்னல்கள் அழுத்தத்தின் காரணமாக உடைந்தன. இதுதான் விபத்துக்களுக்கான காரணம்!
சதுர ஜன்னல்களுடன் ஒப்பிடுகையில், வட்டமான ஜன்னல்கள் அழுத்தத்தை சமமாக விநியோகிக்கின்றன. ஏனென்றால், வட்டமான ஜன்னல்களுக்கு அழுத்தத்தைக் குவிப்பதற்கு மூலைகள் இல்லை. எனவே விரிசல்கள் ஏற்படும் நிகழ்விற்கு இங்கே வேலை இல்லை. விமானத்தின் உள்ளேயும் வெளியேயும் அடிக்கடி ஏற்படும் அழுத்த வேறுபாடுகளுக்கு வட்ட வடிவங்களே சிறந்தது, அதுவே அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது என்பது இப்படித்தான் கண்டறியப்பட்டது. இதேபோல், கப்பலில் காற்றழுத்தத்தை சீராக வைத்திருக்க ப்ளீட் ஹோல்ஸ் (bleed holes) இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.