HOME»NEWS»TREND»who was avni and why was she killed all you need to know about t1 the man eater tigress vin ghta
2018ம் ஆண்டு மேன்-ஈட்டர் அவ்னி புலியை கொன்றவருக்கு வெகுமதி அளித்த விவகாரம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
தொடர்ந்து 200 பேர் கொண்ட மிகப் பெரியக் குழு ட்ரோன் உதவியுடன் அவ்னி புலியைக் கொல்ல 3 மாதங்களாக முயன்று வந்தது. பின்னர் குறி தவறாமல் துப்பாக்கி சுடும் திறமை கொண்ட அஸ்கர் அலி என்பவரின் உதவியுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி வனத்துறையினர் அந்த புலியை சுட்டுக்கொன்றனர்.
தொடர்ந்து 200 பேர் கொண்ட மிகப் பெரியக் குழு ட்ரோன் உதவியுடன் அவ்னி புலியைக் கொல்ல 3 மாதங்களாக முயன்று வந்தது. பின்னர் குறி தவறாமல் துப்பாக்கி சுடும் திறமை கொண்ட அஸ்கர் அலி என்பவரின் உதவியுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி வனத்துறையினர் அந்த புலியை சுட்டுக்கொன்றனர்.
கடந்த 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் 13 பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மேன்-ஈட்டர் புலி என்று கூறப்படும் அவ்னி கொல்லப்பட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து, உச்சநீதிமன்றம் கொல்லப்பட்ட புலி உண்மையில் மனிதனை உண்பவரா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுகுறித்து பதிலளிக்க மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புலியைக் கொன்ற நபருக்கு வழங்கப்பட்ட வெகுமதி குறித்து விளக்குமாறும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவ்னி புலி கொல்லப்பட்டதற்கான காரணம்:
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள போராடி வனப்பகுதியில் வசித்துவந்த 6 வயது பெண் புலி ஒன்று தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வந்தது. இந்தப் புலிக்கு இரண்டு குட்டிகளும் இருந்தன. வனத்துறையினர் இந்தப் புலிக்கு அவ்னி என்று பெயரிட்டிருந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு போர்தி கிராமத்தைச் சேர்ந்த ஷோனாபாய் போஸ்லே என்பவரை தான் அவ்னி புலி முதன் முதலில் கொன்றதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை புலியின் கோரப்பசிக்கு 13 பேர் இரையாகினர். இதனால் மனித உயிருக்கு பங்கம் விளைவிக்கும் அந்த புலியை கொல்லவேண்டும் என்ற வேண்டுகோள் வலுத்தது. இந்தநிலையில் வனப்பகுதியில் குட்டிகளுடன் சுற்றித்திரிந்த அவ்னியை சுட்டுக் கொல்ல பம்பாய் உயர்நீதிமன்றத்திடம் வனத்துறையினர் அனுமதி வாங்கினர்.
தொடர்ந்து 200 பேர் கொண்ட மிகப் பெரியக் குழு ட்ரோன் உதவியுடன் அவ்னி புலியைக் கொல்ல 3 மாதங்களாக முயன்று வந்தது. பின்னர் குறி தவறாமல் துப்பாக்கி சுடும் திறமை கொண்ட அஸ்கர் அலி என்பவரின் உதவியுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி வனத்துறையினர் அந்த புலியை சுட்டுக்கொன்றனர். மேலும் இந்த புலியை சுட்டு கொன்றவருக்கு விருதும் வழங்கப்பட்டது. அதேவேளையில் அவ்னியை சுட்டுக் கொன்றபோது வனத்துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் யாரும் உடன் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் வனத்துறை அவ்னியை உயிரோடு பிடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.
வழக்கு தொடர்ந்த ஆர்வலர்:
அவ்னி கொலை செய்யப்பட்தை கண்டித்து விலங்குகள் நல ஆர்வலர்கள், புலிகள் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். அது சட்டவிரோதமானது என்றும், "ட்ராபி கில்லிங் " என்றும் குற்றம் சண்டிகர். மேலும், இது தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. அதில் ஒன்று தான் ஆர்வலர் சங்கீதா தோக்ரா தொடர்ந்த வழக்கு. அவ்னி கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா தோக்ரா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் முன்பு வழங்கு தொடர்ந்தார். ஆனால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கு கடந்த 10ம் தேதி தலைமை நீதிபதி போப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபன்னா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுட்டுக்கொல்லப்பட்ட பெண் புலி அவ்னி மனிதர்களை கொல்லவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக சங்கீதா தோக்ரா வாதிட்டார். அதனை எப்படி பிரேதபரிசோதனையில் கண்டுபிடிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதன் பிரேத பரிசோதனையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற அவரது கூற்றை நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், கோர்ட் உத்தரவை மீறி புலியை கொன்றவர்களுக்கு வெகுமதி அளித்ததற்காக மகாராஷ்டிர முதன்மை செயலாளர் விகாஸ் கார்கே மற்றும் 8 அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.