ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

டாக்டரின் கையெழுத்தா இது..! இணையத்தை ஆச்சரியப்படுத்திய கேரள மருத்துவர்

டாக்டரின் கையெழுத்தா இது..! இணையத்தை ஆச்சரியப்படுத்திய கேரள மருத்துவர்

மருத்துவர் எழுத்து

மருத்துவர் எழுத்து

Trending | கேரளாவை சேர்ந்த மருத்துவர் அழகாய் மருந்துச்சீட்டில் மருந்துகளை எழுதிக் கொடுத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு டிரெண்டாகியும் வருகிறது. யார் இவர்? என்ன செய்து வருகிறார்? என்பது பற்றி நாமும் அறிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

சாதாரண சளி, இருமல் என்றாலும் மருத்துவமனைக்கு தான் உடனடியாக செல்வோம். வழக்கம் போல மருத்துவர்களும் நம்மை பரிசோதித்துவிட்டு நாம் சாப்பிட வேண்டிய மருந்துகளையெல்லாம் மருந்துச்சீட்டில் எழுதிக் கொடுப்பார்கள்… இல்லை. இல்லை.. கிறுக்கித் தான் கொடுப்பார்கள். என்ன தான் எழுதி இருக்கிறார்கள்? என்று வாசித்து பார்க்கலாம் என்றால் கூட சுத்தமாக எதுவும் தெரியாது. ஏதோ நம் முன்னோர்கள் பல கல்வெட்டில் செதுக்கி இருப்பார்களே.. அதுப்போன்று தான் சில சமயங்களில் மருத்துவர்களின் எழுத்துக்கள் அமைந்திருக்கும். ஆனால் மெடிக்கல் கடையில் இருப்பவர்களுக்கு மட்டும் புரிந்து விடும். ஏன் இப்படி எழுதிக் கொடுக்கிறார்கள்.. இப்படித் தான் எழுதனுமா? என மருத்துவர்களை கலாய்க்கும் படியான பல மீம்ஸ்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வலம் வந்தது.

இந்நிலையில் தான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கேரளாவை சேர்ந்த மருத்துவர் அழகாய் மருந்துச்சீட்டில் மருந்துகளை எழுதிக் கொடுத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு டிரெண்டாகியும் வருகிறது. யார் இவர்? என்ன செய்து வருகிறார்? என்பது பற்றி நாமும் அறிந்துக் கொள்வோம்.

மருத்துச்சீட்டின் மூலம் டிரெண்டான மருத்துவர்…

திருச்சூரை சேர்ந்த மருத்துவர் நிதின் நாராயணன் இங்குள்ள மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்த பிறகு ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.டி முடித்துள்ளார். இவர் தற்போது பாலக்காட்டில் உள்ள நெம்மாராவில் உள்ள CHC ல் பணிபுரிந்துவருகிறார். மற்ற மருத்துவர்களை போல் இல்லாமல் தனித்துவமாக இவர் விளங்குவதற்குக் காரணம் இவரின் கையொழுத்து தான். டாக்டர் என்றால் மருந்துச்சீட்டுகளை கிறுக்கல் மொழியில் தான் எழுத வேண்டும் என்ற நிலையை மாற்றியுள்ளார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் மருந்துச்சீட்டுகளை அனைவருக்கும் புரியும் படி அழகாகத் தான் எழுதுவேன் என்றும் இதை யாருக்காகவும் எப்போதும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்கிறார் கேரள மருத்துவர்.

மேலும் இதுக்குறித்து பேசிய மருத்துவர் நிதின், சிறு வயதில் இருந்தே அழகாக எழுதுவது எனக்கு பிடிக்கும் என்றும் எதற்காகவும் அதை மாற்றக்கூடாது என்ற மனநிலை எப்போதும் இருக்கும். நான் மருத்துவரான பிறகும் மற்ற மருத்துவர்களைப் போன்று இல்லாமல் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக எனக்குப் பிடித்த என்னுடைய கையெழுத்தை மாற்றவே இல்லை என்கிறார். மேலும் எத்தனை நோயாளிகள் வெளியில் சிகிச்சைக்காக காத்திருந்தாலும் பரவாயில்லை. வெறும் 2 நிமிடங்கள் தான் மருத்துவச் சீட்டுகளை எழுத நேரம் எடுக்கும் என்பதால் புரியும் படி தான் எழுதுவேன் என்று கூறுகிறார். இவ்வாறு நான் செய்வது சாதாரண விஷயமாக இருந்தாலும், மக்கள் அனைவரும் பாராட்டுவது எனக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்கிறார்.

Also Read : நிரந்தர வேலையை உதறித் தள்ளிய பெண் - டெலிவரி ஏஜெண்டாக வாரம் 90 ஆயிரம் சம்பாதிக்கிறார்!

இந்நிலையில் தான் மருத்துவர் நிதின் நாராயணன் எழுதிய மருத்துவச் சீட்டு முகநூலில் வெளியான நிலையில் நெட்டிசன்களிடம் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. “ மருத்துவர் பாராட்டுதலுக்குரியவர், அருமை, என்பது போன்ற பல்வேறு கருத்துகளை இணையத்தில் பதிவிட்டுவருகிறார்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Doctor, Handwriting, Trending