ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உங்கள் மூளைக்கு சவால்... இங்கே பொய் சொல்வது யார் என்று கண்டுபிடிக்க முடியுமா?

உங்கள் மூளைக்கு சவால்... இங்கே பொய் சொல்வது யார் என்று கண்டுபிடிக்க முடியுமா?

 உங்களால் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

உங்களால் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

நாங்கள் க்ளூ கொடுப்பதற்கு முன்பே கண்டுபிடித்து விட்டர்கள் என்றால் உன்மையில் நீங்கள் அறிவாளி தான்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகும் புதிர் விளையாட்டுகளில் ஆப்டிகல் இல்யூஷன்களும், பிரெயின் டீசர்களும் முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக இல்யூஷன்களை விட பிரெயின் டீசர்கள் புதிர்களை மிகவும் சுவாரஸ்யமாக்குகின்றன.

  ஆக்கப்பூர்வமான சிந்தனை மூலம் மட்டுமே இந்த பிரெயின் கேம்ஸ்களை தீர்க்க முடியும். பிரெயின் டீசர்கள் மூலம் புதிரை கண்டுபிடிக்கும் சவால்களை ஏற்று கொள்வது நம் மூளை மற்றும் செல்களுக்கு இடையேயான தொடர்பை கூர்மையாக்கும். ஏனென்றால் இந்த பிரெயின் டீசர் ஐகியூ டெஸ்ட்களுக்கான விடையை கண்டறிய நீங்கள் வழக்கமான முறையில் சிந்திக்க கூடாது. தீர்வை கண்டறிய நாம் சற்று வித்தியாசமாக சிந்திக்க வேண்டும்.

  தற்போது நாம் ஒரு சுவாரஸ்யமான பிரெயின் டீசரை இங்கே பார்க்கலாம். இங்கே நாம் பார்க்க போகும் பிரெயின் டீசரில் பொய் கூறும் நபரை நீங்கள் அடையாளம் காண வேண்டும். கீழே நீங்கள் பார்க்க போகும் பிரெயின் டீசரில் தனித்தனியாக கார்களை ஒட்டி வந்த இரு நபர்கள் இருக்கிறார்கள். இருவரின் செயல்கள் மற்றும் சூழ்நிலையின் அடிப்படையில் இவர்கள் இருவரில் யார் பொய் சொல்கிறார்கள் என்பதை நீங்கள் சரியாக அனுமானித்து சொல்ல வேண்டும், அதுவும் வெறும் 5 வினாடிகளில்.

  கீழே உங்களுக்குக்கான பிரெயின் டீசர் இமேஜ்:

  மேலே உள்ள பிரெயின் டீசர் இமேஜில் இரு கார் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காணலாம், இதற்கு காரணம் இருவரில் யாரோ ஒருவர் எதிரில் இருக்கும் சீட்டிங் ஏரியாவை தனது காரால் மோதி சேதப்படுத்தி உள்ளனர். கார் மோதியதால் சேர் மற்றும் டேபிள் உடைந்து கீழே கவிழ்ந்து கிடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

  வலது பக்கத்தில் உள்ள நபர் நீல நிற காரையும், இடது பக்கத்தில் உள்ள நபர் சிவப்பு நிற காரையும் வைத்திருக்கிறார். மேலும் இருவரும் மாறி மாறி இந்த சேதத்திற்கு காரணம் நீ தான் என்று வாக்குவாதம் செய்வது போல காட்டப்பட்டுள்ளது. ஆனால் இவர்களில் ஒருவர் தான் இந்த சேதத்திற்கு காரணம், மற்றொருவர் பொய் சொல்கிறார். இப்போது இந்த இருவரில் சேதத்திற்கு காரணம் யார் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

  Also Read : சாலையோரங்களில் பல தாபா பார்த்து இருப்பீங்க... ஆனால் இந்த பெண் நடத்தும் தாபா புதுரகம்

  எங்களால் எப்படி முடியும் என்று குழம்ப வேண்டாம், ஏனென்றால் பதில் மிகவும் எளிமையானது. ஆனால் அதே சமயம் சற்று ட்ரிக்கியானது. எனவே சரியான பதிலை கண்டுபிடிக்க மேலே உள்ள பிரேயின் டீசர் இமேஜை நன்கு உற்று பார்க்க வேண்டும். இப்போது இந்த இமேஜில் ஹைலைட்டாக தெரிய கூடிய முக்கியான ஒன்று டயர் மார்க். இதை வைத்து உங்களால் யார் பொய் சொல்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள்.

  நாங்கள் க்ளூ கொடுப்பதற்கு முன்பே கண்டுபிடித்து விட்டர்கள் என்றால் உன்மையில் நீங்கள் அறிவாளி தான். அதே நேரம் இந்த க்ளூவை வைத்து விடையை கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் சிறப்பு. இன்னும் விடையை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்..

  விடை :

  கீழே இருக்கும் டயர் மார்க் இமேஜில் வலது பக்கம் இருக்கும் நீல நிற காரின் டயரின் வடிவத்துடன் டயர் அடையாளங்கள் பொருந்துகின்றன. அருகில் இருக்கும் சேர், டேபிள்களை காரால் மோதி சேதப்படுத்திய குற்றவாளி வலது பக்கம் இருக்கும் நபர்தான். இன்னும் உங்களுக்கு குழப்பம் நீடித்தால் விடையுடன் கூடிய இமேஜை கீழே பாருங்கள்.

  இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் தவறை செய்து மறைத்தது யார் என்று.

  Published by:Vijay R
  First published:

  Tags: Optical Illusion