சமூகவலைதளத்தை ஆளும் ஹஸ்புல்லா மாகோமெடோவ் யார்? அவருக்கு வயது என்ன?

Hezbollah Magomedov

குழந்தையாக இருக்கிறார், ஆனால் முகம் அப்படி இல்லையே, வயதான தோற்றத்துடன் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம்

  • Share this:
குழந்தை போல் இருக்கும் ஹஸ்புல்லா மாகோமெடோவ், எம்.எம்.ஏ யுனிவர்ஸ் சோஷியல் மீடியா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

சமூகவலைதளங்களில் எப்போதும் குடியிருப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், நிச்சயம் இதனை அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்புகள் இல்லை. குழந்தைபோல் காட்சியளிக்கும் ஹஸ்புல்லா மாகோமெடோவ் (Hasbulla Magomedov) சமூகவலைதளங்களை ஆட்கொண்டிருப்பவர்களில் ஒருவராக இருக்கிறார். எல்லா தளங்களிலும் இவரின் வீடியோக்களை பார்க்க முடியும். முதல்முறையாக பார்ப்பவர் என்றால், உங்களுக்கு சில கேள்விகள் எழலாம். குழந்தையாக இருக்கிறார், ஆனால் முகம் அப்படி இல்லையே, வயதான தோற்றத்துடன் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். உருவத்தை பார்த்தால் 5 வயது குழந்தை இருக்கும் உயரத்தில் இருப்பார்.

ஆனால், அவருக்கு தற்போது 18 வயதாகிறது. ரஷ்யாவின் மகச்சலா (Makhachkala) பகுதியில் வசித்து வருகிறார். ஜீன் குறைபாடு காரணமாக அவரது உருவம் பார்ப்பதற்கு குழந்தைபோல் இருக்கிறது. ஹஸ்புல்லாவின் உயரம் மற்றும் குரலும் குழந்தைபோலவே உள்ளது. அவர் Growth Hormone குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. ஸ்போர்ட்ஸ்கீடாவில் வெளியாகியுள்ள தகவலின்படி, அவரது உயரம் ஒரு மீட்டர். 16 கிலோ எடையுடன் இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யு.எப்.சி ஸ்டார் மற்றும் முன்னாள் லைட்வெயிட் சாம்பியனான கபீப் நூர்மகோமெடோவ் (Khabib Nurmagomedov)-வும் ஹஸபுல்லா பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். டிக்டாக்கில் பல்வேறு காமெடி கன்டென்டுகளை போட்டுவந்த ஹஸ்புல்லாவின் குழந்தைகளுடன் சண்டையிடும் வீடியோக்கள் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குழந்தைகளுடன் சண்டையிடுவதுபோல் நடிப்பது, இதற்கு முன்பு மேற்கொண்ட கன்டென்டுகளைவிட அவருக்கு நல்ல ரீச்சைக் கொடுத்தது.

Also Read:   கத்தி முனையில் 6 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவி!

இதனால், உலகம் முழுவதும் சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமாக இருப்பவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஹஸ்புல்லாவுக்கு, எம்.எம்.ஏ சோஷியல் மீடியா யுனிவெர்ஸ் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அவருடன் இணைந்து 17 வயது தஜிகிஸ்தான் நாட்டு பாடகர் அப்து ரோஸிக்கும் இந்த பட்டத்தை பெற்றுக்கொண்டார். அவரும் ரிக்கெட்ஸ் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையில் எம்.எம்.ஏ அமைப்பு நட்பு ரீதியிலான சண்டைக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஹஸ்புல்லாவும், ரோஸிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வார்த்தை மோதல்களில்கூட ஈடுபட்டுக்கொண்டனர். இருப்பினும், அவர்கள் சண்டையிட்டதற்கான வீடியோ இதுவரை வெளியாகவில்லை.

Also Read:   மருத்துவ கவனிப்பு இல்லை, விழிப்புணர்வு திட்டங்கள் இல்லை: கொரோனாவால் முழுவதும் கைவிடப்பட்ட பழங்குடி மக்கள்!

இதற்கிடையே ஹஸ்புல்லாவுக்கு ரஷ்யாவில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. சமூகவலைதள கன்டென்டுகளுக்காக அவர் குழந்தைகளுடன் விளையாடுவதை ரஷ்ய விளையாட்டு அமைப்பான Dwarf Athletic Association கடுமையாக சாடியுள்ளது. ஹஸ்புல்லா விளையாட்டை கேலிப்படுத்தும் செயலில் ஈடுபடுவதாகவும், அவரின் ஒழுக்கமற்ற செயல் மற்றும் தவறான அணுகுமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. அவரின் இந்த செயல் மற்றவர்களுக்கு முன்னுதாரமாக மாறி விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாகவும் ரஷ்யன் டிவார்ப் அசோசியேஷன் கூறியுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: