Home /News /trend /

9 விநாடிக்குள் இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் ராணியை கண்டுபிடிக்க முடியுமா?

9 விநாடிக்குள் இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் ராணியை கண்டுபிடிக்க முடியுமா?

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

Optical Illusion | ராணியைக் கண்டுபிடிக்க 1 நிமிடம் வரை எடுத்துக்கொண்டுள்ளனர். பலர் 12 வினாடிகளில் ராணியைக் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

  சோசியல் மீடியாவில் தினந்தோறும் ஏராளமான ஆப்டிக்கல் இல்யூஷன்கள் வெளியாகி வருகின்றன. எனவே நெட்டிசன்களுக்கு ஆப்டிக்கல் இல்யூஷன் மேல் இருந்து வந்த தேடல், தற்போது அளவு கடந்த ஆர்வமாக மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இன்று புதிதாக என்ன ஆப்டிக்கல் இல்யூஷனை பார்ப்போம், அதில் இருக்கும் புதிரை எப்படி கண்டுபிடிப்போம் என இணையத்தில் தீவிரமாக தேடும் அளவிற்கு உள்ளனர்.

  தற்போது ஆளுமை திறன், உருவங்களை கண்டுபிடிப்பது அல்லது எண்ணிக்கையை சொல்வது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன்களை விட கண்ணையும், மூளையையும் குழம்ப வைக்க கூடிய அளவிற்கு மிகவும் சிக்கலான ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில் நெட்டிசன்களை தெளிவாக குழப்பும் ‘இருக்கு ஆனா இல்ல’ வகை ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மீதான கவனமும் அதிகரித்து வருகிறது. எனவே இன்று உங்களை தெளிவாக குழப்பக்கூடிய மற்றும் ஆச்சர்யமூட்டும் வகையிலான ஆப்டிக்கல் இல்யூஷனை கொண்டு வந்துள்ளோம்.

  பயணியிடம் ஒரு கப் டீ-க்கு ரூ.70 வசூல் செய்தது ஏன்? - சர்ச்சைக்கு விளக்கம் அளித்த IRCTC

  கீழே உள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தை நன்றாக உற்றுப்பார்த்து, அதனுள் மறைந்திருக்கும் ராணி எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய வேண்டும். உங்கள் பார்வைக்கே புலப்படாத இடத்தில் தந்திரமாக மறைந்துள்ள ராணியை கண்டுபிடிக்க உங்களுக்கு 9 விநாடிகள் மட்டுமே டைம் கொடுக்கப்படுகிறது.

  இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் கடந்த சில ஆண்டுகளாகவே உலக நாடுகள் முழுவதும் மிகவும் பிரபலமாகி வருகிறது. தற்போது மீண்டும் வேகமாக பரவி வரும் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனுக்கான விடையை மிகவும் சொற்ப அளவிலான நபர்கள் மட்டுமே கண்டுபிடித்துள்ளனராம்.

  மறைக்கப்பட்ட ராணி எங்கே?

  ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தில் ஒரு வனப்பகுதிக்கு வெள்ளைக்கார ஆணும், பெண்ணும் சுற்றுலா சென்றுள்ளது தெளிவாகிறது. அவர்கள் காடுகளின் அழகை கண்டு ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு ஒரு நதி, ஆற்றங்கரையில் சில அடர்த்தியான மரங்கள் ஆகியன இருக்கின்றன. அந்த ஆண் அணிந்துள்ள உடையை வைத்து பார்க்கும் போது அவர், பழங்கால சிப்பாய் போல் தெரிகிறார். பெண்ணின் உடையை பார்க்கும் போது அவர் விக்டோரியன் காலத்தைச் சேர்ந்தவர் எனத் தோன்றுகிறது. மேலும் அந்த ஆண் யாருக்கோ தனது தொப்பியை கழட்டி யாருக்கோ மரியாதை தருகிறார். அப்படியானால் அது ராணியாக இருக்க வாய்ப்புள்ளது, 90 விநாடிகளுக்கு மறைந்திருக்கும் ராணியை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.  இந்த சவாலை இதுவரை ஆயிரக்கணக்கானோர் ஏற்றுக்கொண்டு, ராணியைக் கண்டுபிடிக்க 1 நிமிடம் வரை எடுத்துக்கொண்டுள்ளனர். பலர் 12 வினாடிகளில் ராணியைக் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் நாங்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி 9 விநாடிக்குள் ராணியை கண்டுபிடியுங்கள் என சவால் விட்டுள்ளோம்.

  உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மறைந்திருக்கும் ராணியை கண்டுபிடிக்க வெறும் 5 விநாடிகள் மட்டுமே போதும். ராணியை கண்டுபிடித்தீர்களா?, இல்லையா?. அந்த மனிதர் யாருக்கோ மரியாதை செலுத்த தனது தொப்பியை கழட்டிவிட்டு, எந்த திசையை நோக்கிப் பார்க்கிறாரோ அதனை நன்றாக உற்றுநோக்குங்கள்.

  மெர்சல் அரசன் TTF வாசன்.. அரசியல், சினி பிரபலங்களையே பொறாமைப்பட வைத்த 2K கிட்ஸ்..!!

  கண்டுபிடித்துவிட்டீர்களா?. நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் ராணியின் உருவம் கண்ணுக்கு புலப்படாத அளவிற்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது. சிப்பாய்க்கு எதிரே இருக்கும் மரத்தை சற்றே உற்றுப் பாருங்கள்.

  என்ன இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா?. சரி, விடையை அறிந்து கொள்ளுங்கள். ஆண் நபருக்கு எதிரே இருக்கும் இரண்டு மரத்திற்கு இடைப்பட்ட இடைவெளியை நன்றாக உற்றுப்பாருங்கள், இப்போது ராணியின் உருவம் தெரிகிறதா?. இவ்வளவு ஈஸியான புதிரை நம்மால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என யோசிக்கிறீர்களா?.  ராணி என்றதுமே நமது அனைவரது மனக்கண் முன்பும் பிரிட்டனை சேர்ந்த ராணி எலிசபெத் உருவம் தான் கண்ணுக்கு தோன்றும். ஆனால் இது ஒளியியல் மாயை என்பதால் கிரீடம், ஆடம்பரம் என எதுவும் இல்லாமல் கற்பனையான ராணி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உருவம் ராணி எலிசபெத்தின் பாட்டியான விக்டோரியா மகாராணியின் உருவத்தை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vijay R
  First published:

  Tags: Optical Illusion

  அடுத்த செய்தி