வலிமை அப்டேட் வந்தாச்சு... குற்றாலம் அப்டேட் எங்கே? சீசன் வந்தும் களையிழந்து காணப்படும் தென்காசி மக்கள்

குற்றாலம் அப்டேட் எங்கே?

யூரோ கால்பந்து போட்டியின் போது அஜித் ரசிகர்கள், வலிமை அப்டேட் கேட்டு பதாகைகளை ஏந்தினர். இந்த பதாகையை எடிட் செய்து குற்றாலம் எப்ப விடுவீங்க என கேலியாக கேட்டுள்ளனர்.

 • Share this:
  குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள், தடையை நீக்கி அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும்.

  பிரதான அருவியான மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீராட நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

  கொரோனா பரவலால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலம் வந்துள்ள சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விரைவில் தடையை நீக்கி அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ALSO READ |  சாதனை படைத்த அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர்!

  இது ஒரு புறம் இருக்க தற்போது அனைவரும் எதிர்பார்த்த வலிமை அப்டேட் கூட கிடைத்து விட்டது இந்த குற்றாலம் அப்டேட் எப்போது கிடைக்கும் என இணையத்தில் மீம்ஸ் ஒன்று வைரலாகி உள்ளது.  யூரோ கால்பந்து போட்டியின் போது அஜித் ரசிகர்கள், வலிமை அப்டேட் கேட்டு பதாகைகளை ஏந்தினர். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பதாகையை எடிட் செய்து குற்றாலம் எப்ப விடுவீங்க என கேலியாக கேட்டுள்ளனர்.   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: