'கைலாசா' எங்கே இருக்கிறது? நித்யானந்தா வெளியிட்ட வீடியோ

ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

'கைலாசா' எங்கே இருக்கிறது? நித்யானந்தா வெளியிட்ட வீடியோ
ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
  • Share this:
தலைமறைவாக உள்ள நித்தியானந்தவை போலீஸ் தீவிரமாக தேடிக்கொண்டிருக்க, அவரோ வெகு கூலாக தனது தொலைக்காட்சியில் பிரசங்கம் செய்து கொண்டு தினமும் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

உள்ளூரில் பேமசாக இருந்த நித்யானந்தா இப்போது உலக பேமசாகிவிட்டார். உலகநாயகனுக்கு பிறகு விதவிதமான கெட்டப்புகள் அதிகம் போட்டவர் நித்யானந்த தான் என்று இவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர்.

ஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வேகமெடுக்க, மறுபக்கம், குஜராத் ஆசிரம வழக்கு நெருக்கடி ஏற்படுத்த, நித்யானந்தா எங்கே இருக்கிறார் என அவரது சீடர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.


இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கைலாசா என்ற இணையதளத்தில் நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை இடம் பெற்றிருந்தன. எனினும், தினமும் வீடியோ மூலமாக ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்திக்கொண்டே இருந்தார் நித்யானந்தா. ஆனால் இதற்கு ஈக்வேடார் நாடு மறுப்பு தெரிவித்திருந்தாலும் கைலாசா நாடு குறித்து தினமும் செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிது. கைலாசா நாடு குறித்தும், நித்யானந்தாவை விமர்சித்தும் பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நித்யானாந்த சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,  “தான் வாங்கியதாக கூறப்படும் தீவு எங்கிருக்கிறது என்று தெரிவித்தால், அங்கு நிம்மதியாக செட்டில் ஆகிவிடுவேன்.  மீம்ஸ் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களால் கைலாசா மிகவும் பிரபலாமாகி விட்டது. மீம்ஸ் கிரியேட்டர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பது எனக்கு தெரியாது.அவர்கள் சொல்லும் கைலாசா நாடு எங்கிருக்கிறது என்று சொன்னால் அங்கு சென்று ஏதாவது ஒரு பதவியை வாங்கி நிம்மதியாக செட்டிலாகி விடுவேன். இதுக்கு மேல் நான் என்னா சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் மீம்ஸ் கிரியேட்டர்கள் வாங்கிய காசுக்கு மேல கூவுறாங்க“ என்று தனக்கே உரித்தான பாணியில் பேசினார்.
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading