ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

“காணாமல் போன 1 டாலர் எங்கே? மண்டையை குழப்பும் கணக்கு..முடிஞ்சா விடை சொல்லுங்க..!

“காணாமல் போன 1 டாலர் எங்கே? மண்டையை குழப்பும் கணக்கு..முடிஞ்சா விடை சொல்லுங்க..!

திக்கு முக்காட வைக்கும் கணிதம்

திக்கு முக்காட வைக்கும் கணிதம்

இவ்வாறு மறைமுகமாக மூளைக்கு சவால் விடும் வகையிலான கணிதப் புதிர்கள் எப்போதுமே சுவாரஸ்யமாகவே

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கணக்கா? வேண்டாமே… வேற ஏதாவது பாடம் படிக்கலாமா? என்ற பதில் பள்ளிப்பருவ மாணவர்கள் முதல் கல்லூரி பயிலும் மாணவர்கள் வரை அனைவருக்கும் சொல்லக்கூடிய பொதுவான வார்த்தை. அதற்கேற்றால் போல் தான், தற்போது இணையத்தில் மூளைக்கு சவால் விடும் வகையிலான புதிர் கணக்கு ஒன்று வைரலாகிறது. எப்படி? என்ன தான் இந்த கணக்கில் இருந்தது? என நாமும் தெரிந்து கொள்வோம்..

இணையத்தில் வைரலாகும் எண் கணித புதிர்…

97 டாலர் மதிப்புள்ள ஒரு பையை வாங்குவதற்காக எனது அம்மாவிடமிருந்து  50 டாலரும், அப்பாவிடமிருந்து 50 டாலரும் கடன் வாங்கினேன். அதை வைத்து 97 டாலர்  மதிப்புள்ள பையை வாங்கிவிட்டேன். பின்னர் மீதமிருந்த 3 டாலரில்  1 டாலரை அப்பாவுக்கும், 1 டாலரை அம்மாவுக்கும் திருப்பிக்கொடுத்துவிட்டேன். மீதமிருந்த 1 டலரை நான் எனக்காக வைத்துக்கொண்டேன். தற்போது நான், $49+$49=$98 கடன்பட்டிருக்கிறேன்.

மேலும் நான் எனக்காக ஒதுக்கிய $1 யை சேர்த்து மொத்தம் 99 டாலர். இறுதியில் தற்போது காணாமல் போன 1 டாலர் எங்கே? எனக்கு கண்டுபிடித்துக்கொடுங்கள் என்று கேட்பது போல எண் கணித புதிர் ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

Read More : அந்த புன்னகை விலைமதிப்பற்றது… 80 ஆண்டு கால நட்பின் கொண்டாட்டம்.!

இதற்கு பல நெட்டிசன்கள் விடைக் கண்டுபிடித்தவாரும் பலர் விடைத்தெரியவில்லை குழம்புகிறது எனவும் கூறுகின்றனர்.இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக, கணித ஆசிரியர் ரேச்சல் ஃப்ரேசியர் தெரிவித்துள்ள தகவலின் படி, நீங்கள் இந்த கணக்கை பார்க்கும் விதம் தான் தவறானது. நீங்கள் சொல்வது போல அம்மா அப்பாவிடம் நீங்கள் மொத்தமாக 100 டாலர் வாங்கி உள்ளீர்கள். அதில் 97 டாலருக்கு பையை வாங்கி விட்டீர்கள் 2 டாலரை அவர்களிடம் கொடுத்து விட்டீர்கள் உங்கள் கைகளில் 1 டாலர் இருக்கிறது. ஆக மொத்தம் (97+ 2+1+=100). கணக்கு சரியாக வருகிறது.

இவ்வாறு மறைமுகமாக மூளைக்கு சவால் விடும் வகையிலான கணிதப் புதிர்கள் எப்போதுமே சுவாரஸ்யமாகவே இருக்கும். மக்கள் இந்தப் புதிர்களைத் தீர்ப்பதில் ஈடுபட்டு பல விவாதங்களை முடிக்கிறார்கள். இந்த புதிர்கள் பல கோட்பாடுகளைப் பயன்படுத்தி தீர்க்கப்படுகின்றன, மேலும் ஒரு சிக்கலை எவ்வாறு பல்வேறு வழிகளில் தீர்க்க முடியும் என்பதையும் நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

First published:

Tags: Trending, Viral