Home /News /trend /

உங்கள் பெர்சனாலிட்டி எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் ஆப்டிக்கல் இல்யூஷன் சவால்!

உங்கள் பெர்சனாலிட்டி எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் ஆப்டிக்கல் இல்யூஷன் சவால்!

ஆப்டிக்கல் இல்யூஷன் சவால்!

ஆப்டிக்கல் இல்யூஷன் சவால்!

Optical Illusion | ஒரு ஓவியத்தில் மறைத்திருக்க வேண்டியதை கண்டுபிடிப்பதாகட்டும் அல்லது அதில் உள்ள புதிருக்கு தீர்வு தருவதாகட்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்போதுமே நம் கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைகின்றன.

    நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆப்டிக்கல் இல்யூஷன். ‘இருக்கு ஆனா இல்ல’ என்று கூறுவது போல, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். அதே போல இங்கே ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் (மாயை) புகைப்படம் உள்ளது.

    சமீபகாலமாக, சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் தலை சுற்ற வைக்கும் வகையிலான ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு ஓவியத்தில் மறைத்திருக்க வேண்டியதை கண்டுபிடிப்பதாகட்டும் அல்லது அதில் உள்ள புதிருக்கு தீர்வு தருவதாகட்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்போதுமே நம் கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைகின்றன. புதிர்கள், மைண்ட் கேம்கள் மற்றும் சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பதில் உள்ள சுவாரயங்களை விட ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளைக்கு சிறந்த சவாலாக உள்ளன. ஆப்டிக்கல் இல்யூஷன் புதிர்கள் அனைத்துமே திறமையாளர்களால் வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகும்.

    அதே போல ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம் தான் இங்கே உள்ளது. இதன் மூலம் நீங்கள் எப்படிப்பட்டவர், எப்படி சிந்திப்பீர்கள் என்பதைப் பற்றி எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.



    இங்கே உள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் இரண்டு விதமான படங்களில் மறைந்துள்ளன. நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், உங்கள் குணநலன் எப்படி என்பதை மற்றும் உங்கள் ஆளுமைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் இதில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தான் முதலில் பார்ப்பார்கள். வேறு கண்ணோட்டத்தில் உற்று நோக்கும்போது மறைந்திருக்கும் மற்றொரு புகைப்படமும் தெரியும்.

    இந்தப் படத்தில், மரம் மற்றும் இரண்டு முகங்கள் உள்ளன.

    நீங்கள் முதலில் பார்த்தது மரம் என்றால்,



    உங்கள் பார்வையில் இருந்து எந்த விவரமும் தப்பிக்க முடித்து. மேலும், எல்லாவற்றையும் தீர ஆய்வு செய்து, முழு விவரங்களையும் அறிவீர்கள். அதே போல, மிக மிக எளிதாக மற்றவர்களின் மனநிலையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். சூழல் அறிந்து பேசுவதில் நீங்கள் வல்லவர். இதனால், யாரையும் எளிதில் காயப்படுத்த மாட்டீர்கள், அதே போல மனநிலை அறிந்து பிரச்சனைகளை சுமூகமாக கையாளுவீர்கள்.

    நீங்கள் முதலில் பார்த்தது ஒருவரை ஒருவர் பார்க்கும் ஆண் மற்றும் பெண்ணின் முகங்கள் என்றால்,



    ஒரு ஜோடி, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கும் முகங்கள் உள்ள புகைப்படத்தை நீங்கள் முதலில் பார்த்தால் நீங்கள் மிகவும் லாஜிக்கலான நபர். நியாயவாதி, அமைதியானவர் மற்றும் எல்லா விஷயத்தையும் நடைமுறையில் தான் பார்ப்பீர்கள். கோபமாக இருக்கும் நபர்களை உங்களால் மிக எளிதாக எதிர்கொள்ள முடியும். சூழல் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை நீங்கள் மிகவும் மென்மையாக கையாளுவீர்கள்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Optical Illusion, Trending, Viral

    அடுத்த செய்தி