Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

காதல் உறவில் நீங்கள் எப்படிப்பட்டவர்? இந்த ஓவியத்தை வைத்தே சொல்விட முடியுமாம்

காதல் உறவில் நீங்கள் எப்படிப்பட்டவர்? இந்த ஓவியத்தை வைத்தே சொல்விட முடியுமாம்

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

ஓவியத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு தெரிந்தது ஒரு அமைதியான முகம் என்றால், சூழ்நிலைகளை பகுத்து பார்த்து முடிவெடுக்க கூடியவர்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

தினந்தோறும் பல வகையான ஆப்டிக்கல் இல்யூஷன்களை பார்த்து வருகிறோம். இன்று உங்கள் காதல் உறவில் நீங்கள் எப்படிப்பட்டவர், உங்கள் பலவீனம் என்ன என்பதை ஆராயக்கூடிய ஆப்டிக்கல் இல்யூஷனை கொண்டு வந்துள்ளோம்.

சோசியல் மீடியாவில் நாள்தோறும் விதவிதமான ஆப்டிக்கல் இல்யூஷன் சம்பந்தமான போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மூளையையும், கண்ணையும் ஒரே நேரத்தில் ஏமாற்றக்கூடிய ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசமான புதிர் விளையாட்டாக பார்க்கப்படுகிறது. ஓவியத்திற்குள் மறைந்திருக்கும் உருவங்களை கண்டுபிடிப்பது, மேலோட்டமான பார்வைக்கு ஒரு மாதிரியும், உற்றுநோக்கினால் வேறு மாதிரியும் காட்சியளிப்பது என பலவகையான ஒளியியல் மாயைகள் கண்கட்டி வித்தை காட்டி வருகின்றன.

இந்த வகைகளில் ஒருவரது குண நலன்கள், பண்பு, ஆளுமை ஆகியவற்றை அலசி ஆராயக்கூடிய ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்கு வரவேற்பு அதிகம். இன்று அப்படியொரு ஓவியத்தை தான் நாங்கள் உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓவியத்தில் நீங்கள் முதலில் எதைப் பார்க்கிறீர்கள் என்பதை வைத்து உங்கள் துணையுடன் இருக்கும் போது ஏற்படும் பலவீனத்தை அறிய முடியும்.

Also Read : கல்யாணத்த நிறுத்துங்க...  மணப்பெண் சொன்ன அதிர்ச்சி காரணம்

இந்த ஆளுமை சோதனை நிபுணர்கள் மற்றும் உளவியலாளர்களால் உங்கள் முதல் அல்லது ஆரம்ப கட்ட கணிப்புகளை வைத்து, உங்கள் ஆளுமை பண்புகளின் அடிப்படையில் உறவு மற்றும் டேட்டிங்கில் உங்கள் பலவீனத்தை கண்டறிய உதவுகிறது. குறிப்பாக, உங்கள் காதலியுடனான தனிப்பட்ட பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிய உதவுகிறது.

சரி, ஆப்டிக்கல் இல்யூஷனை நன்றாக பார்த்துவிட்டீர்கள் இல்லையா? உங்கள் கண்களுக்கு முதலில் தெரிவது எது?

* பறக்கும் பறவை

* கண்களை மூடிக்கொண்ட அமைதியான முகம்

* தாயும், குழந்தையும்

* மனிதனின் முகம்

* பழத்தை பறிக்கும் மனிதன்.

அமைதியான முகம்:

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஓவியத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு தெரிந்தது ஒரு அமைதியான முகம் என்றால், சூழ்நிலைகளை பகுத்து பார்த்து முடிவெடுக்க கூடியவர். உங்கள் துணையின் உறவை கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். உணர்ச்சிகள், எண்ணங்கள், உணர்வுகள், குணாதிசயம் ஆகியவற்றை நிர்வகித்தல், திட்டமிடுதலில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள். எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் உங்கள் இயல்பை மாற்றிக்கொண்டு, துணையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இது, உறவை நிர்வகிக்கவும் கட்டமைக்கவும் உதவியாக இருக்கும்.

மனிதனின் முகம்:

நீங்கள் முதலில் மரத்திற்குள் மறைந்திருக்கும் ஆணின் முகத்தைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் சமூக தொடர்புகளைத் தவிர்க்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். தூரத்திலிருந்து மக்களைக் கவனிப்பதில் நீங்கள் மிகவும் வசதியாக உணர்கிறீர்கள். உங்களை பிறர் நிராகரிக்கலாம் என்ற பயம் அல்லது உஙக்ள் கூச்சத்தால் இருக்கலாம்.

நீங்கள் உண்மையிலேயே ஒரு ஆழமான மற்றும் அன்பான உறவை உருவாக்க விரும்பினால், மேலும் உங்கள் காதல் துணையுடன் ஆழமாக இணைந்திருக்க விரும்பினால், உங்கள் பாதுகாப்பு வரம்புகளை தளர்த்த வேண்டும். ஒருவருடன் நீங்கள் அர்த்தமுள்ள மற்றும் நீடித்த தொடர்பை உருவாக்க விரும்பினால், சுய கழிவிறக்கம் அல்லது சொகுசான மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும்.

பறக்கும் பறவைகள்:

நீங்கள் பகல் கனவு காணக்கூடியவர். உங்களின் பெரும்பாலான நேரங்கள் பகல் கனவில் கழிகிறது. எளிதில் திசை திருப்பக்கூடிய நபர். நீங்கள் ஒரு மந்தமான சூழ்நிலையை கூட அற்புதமான சூழலாக மாற்றக்கூடியவர்.

தாயும், குழந்தையும்:

நீங்கள் முதலில் தாயையும் குழந்தையையும் படத்தில் பார்த்தீர்கள் என்றால், உங்கள் குடும்பத்தின் கருத்துக்களை நீங்கள் அதிகமாக நம்புகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள், அவர்களை உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக கருதுகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் குடும்பமே உங்களின் முதன்மையான முன்னுரிமையாகும், இதனால் புதிய நட்பு மற்றும் உறவுகளை உருவாக்குவதில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

Also Read : கூகுள் ஸ்ட்ரீட் வியூ-வில் உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட நாடு இது தான்.!

இருப்பினும், உங்கள் காதல் துணை அல்லது மனைவியைப் பற்றிய உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கருத்துகளுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும், ஆனால் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் அவர்களின் கருத்துக்களை நீங்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டும். உங்கள் குடும்பத்தின் கருத்தின் எடை உங்கள் உறவை ஒருபோதும் சிதைக்கக்கூடாது.

பழத்தை பறிக்கும் மனிதன்:

படத்தில் பழம் பறிக்கும் நபரை நீங்கள் முதலில் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் தொழில் இலக்குகளைப் பற்றி அதீத ஆசை கொண்டவர் என்று அர்த்தம். உங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். உங்கள் வேலை மற்றும் செயல்திறன் மூலம் வெற்றியை அடையவும் நீங்கள் உறுதியாக உள்ளீர்கள்.

மறுபுறம், உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துவது என்பது நீங்கள் விரும்பும் நபருக்கு குறைந்த கவனம் செலுத்துவதாக அர்த்தமல்ல. உங்கள் வேலையைப் போலவே உங்கள் உறவிலும் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் வேலை மற்றும் தொழில் இலக்குகளைப் போலவே அன்பும் உறவுகளும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

First published:

Tags: Optical Illusion