தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் AI பலவிதமான எதிர்காலம் பற்றிய பலவிதமான நுண்ணறிவை வழங்கி வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் செல்ஃபி மீது மிகப்பெரிய மோகம் இருந்தது. தற்பொழுது தொழில்நுட்பம் பல்வேறு வகையில் முன்னேற்றமடைந்த நிலையில் செல்ஃபி மோகம் குறைந்திருந்தாலும், பாரம்பரிய புகைப்படங்களை விட, செல்ஃபிக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. உலகின் கடைசி செல்ஃபி எப்படி இருக்கும் என்ற ஒரு யோசனை தோன்றியதற்கு ஒரு AI அதிர்ச்சியூட்டக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
DALL-E என்று ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உலகின் கடைசி செல்ஃபியில் மனிதர்கள் எப்படி இருப்பார்கள், உலகம் எப்படி இருக்கும் என்பதை கணித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. டிக்டாக்கில் ஷேர் செய்யப்பட்ட இந்தப் புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. மனிதர்கள் போலவே காட்சியளிக்கும் ஒரு சில உருவங்கள் பார்ப்பதற்கு எவ்வளவு அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது மற்றும் மக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பார்க்கும் பொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஒரு வெடிகுண்டால் தகர்க்கப்பட்ட புகைப்படப் பின்னணியோடு, மிகவும் ஒல்லியான உருவத்துடன் ஒரு முகம் காட்டப்பட்டுள்ளது. புகை மூட்டமாக இருக்கும் பின்னணியில் ஜோம்பி போன்ற ஒரு உருவம் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
OpenAI என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு, GTP-3 மாடல் என்ற அடிப்படையில் இத்தகைய அச்சுறுத்தக்கூடிய புகைப்படங்களை DALL-E AI System உருவாக்கியுள்ளது. GTP-3 என்பது ஆழமாக கற்றுக்கொள்ளுதல் என்ற அம்சம் மூலம் மனிதர்களை போலவே உரையாடவும், கதைகள் சொல்லவும், கவிதைகள் எழுதவும், வாசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மொழி சார்ந்த AI டெக்னாலஜி. DALL-E என்பது GTP-3 இன் 12 பில்லியன் பராமீட்டர் ஆகும். இது ஆழமாக கற்றுக்கொள்ளுதல் என்ற செயல்முறையை பயன்படுத்துவதன் மூலம் உள்ளிடப்பட்டிருக்கும் சொற்களின் அடிப்படையில் புகைப்படங்களை உருவாக்குகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பிடம் பூமியில் இருக்கும் மனிதர்களின் கடைசி செல்ஃபி எப்படி இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கான பதிலாகத்தான் மிகவும் நெருக்கடியான மற்றும் ஆபத்தான சூழலில் தீவிரமாக பாதிக்கப்பட்டது போன்ற புகைப்படங்களை AI வெளியிட்டது. ஏற்கனவே உள்ளிடப்பட்டிருக்கும் விவரங்கள் மற்றும் அதனுடைய புரோகிராம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ரேண்டமாகத்தான் ஏஐ செயல்படுகிறது. எனவே, AI வெளியிட்ட அச்சுறுத்தக்கூடிய புகைப்படங்கள் சரியானதாக இருக்கக்கூடும் என்பதற்கு எந்த சான்றும் கிடையாது. இருப்பினும் இந்தப் புகைப்படங்களை பார்த்து அனைவரும் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள்.
Also Read : பாகுபலி ராஜமாதா போல் தனது குழந்தையை மக்களுக்கு காட்டிய கொரில்லா - வைரல் வீடியோ
இதை பார்த்தவுடன் பயந்து விட்டேன், இனிமேல் எப்படி தூங்க முடியும், உலகம் இதை நோக்கித்தான் செல்கிறது, இனி இப்படித்தான் இருக்கும் என்று பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.