சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அதாவது கடந்த 2020 ஜூன் மாதத்தில், மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் என்ற ஏரி அசாதாரண மாற்றத்தை கண்டது. 52,000 ஆண்டுகள் பழமையான இந்த ஏரியில் உள்ள நீர் திடீரென இளஞ்சிவப்பு நிறமாக மாறியது. இது பலருக்கு குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஏரியில் நடந்ததால், இந்த விஷயம் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவியது. ஏரி நீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணத்தைக் கண்டறிய அரசாங்கமும் நடவடிக்கை எடுத்து அதற்கான சோதனைகளுக்கு உத்தரவிட்டது.
இருப்பினும் இது புவி வெப்பமடைதலின் விளைவு என்று சிலர் ஊகித்தாலும், பல மூடநம்பிக்கை கோட்பாடுகளும் வந்ததிகளும் வெளியாகின. எனினும், இது போன்ற சம்பவம் நடப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. உண்மையில், இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்ட ஏரிகள் உலகம் முழுவதும் உள்ளன. எனவே, இந்த நிற மாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்? இளஞ்சிவப்பு ஏரிகளின் எல்லா நிகழ்வுகளிலும் பொதுவான ஒன்று என்னவென்றால் அவை அனைத்தும் உப்பு நீர் ஆகும்.
Also Read : காதலிக்காக பெண் வேடமணிந்து தேர்வு எழுதி மாட்டிய காதலன் - அடுத்து நடந்தது என்ன?
நீரின் உப்புத்தன்மை பல்வேறு வகையான நுண்ணுயிரிகளை உருவாக்குகிறது. இது நிற மாற்றத்தை ஏற்படுத்தும் நிறமி நீரை உருவாக்குகிறது. லோனார் ஏரியின் விஷயத்திலும் இதே தான் நடந்துள்ளது. ஏரியின் நிற மாற்றம் ஹலோஆர்கியா அல்லது ஹாலோபிலிக் ஆர்க்கியா பாக்டீரியாவால் ஏற்பட்டது. இது உப்பு நிறைந்த நீரில் காணப்படுகிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் மழை இல்லாதது, அதிக வெப்பநிலை மற்றும் குறைவான மனித குறுக்கீடு, நீரின் ஆவியாதல் போன்றவற்றின் விளைவாக உப்பு மற்றும் பிஎச் மதிப்பு ஏரியில் அதிகரித்துள்ளது.
அதிகரித்த உப்புத்தன்மை ஹாலோபிலிக் நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலைக் கொடுத்தது. இது இறுதியில் தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாக மாற வழிவகுத்துள்ளது. இந்த பாக்டீரியாக்களின் உயிர் வளர வளர, நீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியது மற்றும் உயிர்மத்தின் வீழ்ச்சியுடன் பாக்டீரியாக்கள் அதன் அசல் நிறத்திற்கு திரும்பியது. தற்போது லோனார் ஏரி மீண்டும் அதன் இயற்கையான நிறத்திற்கு மாறியதும் குறிப்பிடத்தக்கது. மழை காரணமாக புதிய நீர் ஏரி தண்ணீரை நீர்த்துப்போகச் செய்து, pH அளவை குறைத்துள்ளது. மேலும், ஃபிளமிங்கோக்களால் ஹாலோஆர்கியா நுண்ணுயிரிகள் உட்கொள்ளப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
Also Read : ரோபோவைப் போல வேலை செய்யும் தோசை மாஸ்டர் - வைரலாகும் ஆனந்த் மகேந்திராவின் ட்வீட்!
இந்த நுண்ணுயிர்கள் பறவைகளுக்கு நிறமி நிறைந்த உணவாக செயல்பட்டன. ஃபிளமிங்கோக்கள் தங்கள் மீதுள்ள சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தை அவர்கள் உண்ணும் ஆல்கா மற்றும் முதுகெலும்பில் காணப்படும் நிறமிகள் எனப்படும் சிறப்பு வண்ணமயமான இரசாயனங்களிலிருந்து பெறுகின்றன. இருப்பினும் இந்த ஏரிகளின் நீர் குடிக்க ஏற்றதாக இருக்காது என்றாலும், அதை மற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். அதில் நீந்தினால் கூட எந்த பாதிப்பும் இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் லோனார் ஏரியைப் போலல்லாமல், ஆஸ்திரேலியாவின் ஹட் லகூன் அல்லது ஹில்லர் ஏரி போன்ற பல நிரந்தர இளஞ்சிவப்பு ஏரிகளின் நிறம் மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த நீரின் உப்புத்தன்மை மற்றும் pH மாறாமல் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அர்ஜென்டினாவில் ஏரிகள் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இருப்பினும் அந்த ஏரியில் நிற மாற்றமானது பாதுகாக்கப்பட்ட சோடியம் சல்பைட் உட்செலுத்தலால் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.