இன்று பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி மற்றும் 2022-ஆம் ஆண்டு ஆகும். தேதி/மாதம்/ஆண்டு ஃபார்மெட்டில் இன்றைய நாள் 22/2/22 என்று குறிப்பிடப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு என்றாலும் கூட மேற்கண்ட தேதி/மாதம்/ஆண்டு ஃபார்மெட்படி ஆண்டானது சுருக்கமாக 22 என்றே குறிப்பிடப்படுகிறது. அதே போல 22/2/22 என்ற வரிசை நம்முடைய வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வரும். மேலும் இந்த தேதி ஒரு செமட்ரிக்கள் (symmetrical) அல்லது பாலிண்ட்ரோம் (palindrome) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் 22/2/22 என்ற இந்த எண்கள் பின்னோக்கியும் முன்னோக்கியும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.
22/2/22 என்ற இன்றைய நாள் செவ்வாய்கிழமை ஆங்கிலத்தில் ட்யூஸ்டே (Tuesday) ஆக இருக்கிறது. ஆனால் 22/2/22 என்று ஒரே நம்பர் இருப்பதால் இன்றைய நாளை நெட்டிசன்கள் Tuesday-விற்கு பதில் Twosday (டூஸ்டே) என்று குறிப்பிட்டு வருகின்றனர். 22/2/22 என்ற இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இல்லை என்றாலும், எண் 2 அடங்கிய இந்த சிறப்பு வரிசை மீண்டும் 200 ஆண்டுகளுக்கு பிறகு தான் வரும் என்பதே உண்மை. எனவே நாம் மேலே குறிப்பிட்டபடி நம்முடைய வாழ்நாளில் இந்த சிறப்பு தேதியை பார்ப்பது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, "எண் 2 என்பது இரண்டு நபர்களின் அல்லது இரண்டு யோசனைகளின் சங்கமத்தை குறிக்கிறது. கடைசியாக பாலிண்ட்ரோம் தேதி 11 ஜனவரி 2011 அன்று நடந்தது, அதாவது 11/1/11 மற்றும் அடுத்த முறை 11 ஆண்டுகளுக்குப் பிறகு 3 மார்ச் 2033 அன்று அதாவது 3-3-33 அன்று நிகழ உள்ளது.
Also Read : குடிநீருக்காக மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் செலவு செய்யும் பிரபலம்!
மக்கள் டூஸ்டேயை எப்படி கொண்டாடுகிறார்கள்?
கூடைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் பேஸ்பால் போன்ற விளையாட்டுகளில் நம்பர் 2-ஐ விளையாடும் நபர்களுக்கு மரியாதை அளித்து, இந்த நாளின் அபூர்வத்தை அங்கீகரிப்பதன் மூலம் இந்த நிகழ்வை குறிக்க ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். சிலர் இந்த தேதியை சிறந்த ஆன்மீக அர்த்தமுள்ள நாளாக அங்கீகரித்துள்ளனர். புதிதாக ஒன்றை தொடங்க வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க 2/2/22 என்ற இந்த நாள் ஒரு மறக்க முடியாத தேதியாகும்.
உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வரும் இந்த நாளை கொண்டாட சிறப்பு திட்டங்களை வைத்துள்ளனர். அதே போல தி ஸ்டார் செய்தித்தாள் வெளியிட்டு உள்ள தகவல் படி, சீன கலாச்சாரத்தில் எண் 2 மிகவும் மங்களகரமானது எனவே நூற்றுக்கணக்கான ஜோடிகள் 22/2/22 என்ற இன்றைய சிறப்பு தேதியில் தங்கள் திருமணத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.
Also Read : தினக்கூலிக்கு வேலை செய்த முதியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
இந்த Twosday-வை சிறப்பிக்கும் வகையில் கூகுள் ஒரு அற்புதமாக கிராபிக்ஸை தயார் செய்துள்ளது. கூகுள் சர்ச்-ற்கு சென்று Twosday என டைப் செய்து தேடினால் "
Happy Twosday 2 you" என்ற வாசகம் கலர் கலர் கிராபிக்ஸிற்கு இடையே தோன்றி நமக்கு Twosday-விற்கான வாழ்த்துகளை தெரிவிக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.