• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 2021ல் இந்தியாவில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் "Password" இது தான்!

2021ல் இந்தியாவில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் "Password" இது தான்!

 பாஸ்வேர்ட்

பாஸ்வேர்ட்

இவை தவிர அதிக மக்கள் தங்கள் பெயர்களையே பாஸ்வேர்ட்களாக பயன்படுத்த விரும்புவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

  • Share this:
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஒருவர் தினசரி பல வெப்சைட்கள், ஆப்ஸ்கள் மற்றும் பிற சர்வீஸ்களில் உள்நுழைந்து உணவை ஆர்டர் செய்வது முதல் ஈ-காமர்ஸ் சைட்டிலிருந்து ஒரு பொருளை வாங்குவது அல்லது வீட்டில் இருந்தபடி அலுவலக வேலை செய்யும் போது ஒரு போர்ட்டலில் தனது வருகையை பன்ச் செய்வது , பேமெண்ட்ஸ் ஆப்ஸை பயன்படுத்தி கட்டணம் செலுத்துவது, இன்டர்நெட் பேங்கிங்கை ஆப்ரேட் செய்வது வரை பலவற்றை கையாளுகிறார். இவற்றை பாதுகாப்பாக செய்வதற்கு உதவுகின்றன பாஸ்வேர்ட்கள்.

ஹேக்கர்கள் அல்லது மோசடி நபர்களிடமிருந்து நமது டேட்டா மற்றும் பணத்தை காப்பாற்றி கொள்ள அவர்களால் எளிதில் அண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்ட்களை பயன்படுத்த டிஜிட்டல் போர்டல்கள் , காவல்துறை மற்றும் சைபர் கிரைம் நிபுணர்கள் பலமுறை எச்சரித்தாலும் கூட மக்கள் அதை பெரிதாக நினைக்கவில்லை என்பதை NordPass என்ற பாஸ்வேர்ட் மேனேஜர் வெளிப்படுத்தி உள்ளது. NordPass நிறுவனத்தின் ஆய்வுப்படி இந்தியாவில் பொதுவாக மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் "password" தான் என்பதே வேடிக்கை.

இந்தியா முழுவதும் password என்பதையே பாஸ்வேர்ட்டாக சுமார் 1,714,646 பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தியாவில் மட்டுமல்ல , 'password'-ஐயே பாஸ்வேர்ட்டாக நிறைய மக்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடாவிலும் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. இதை கிராக் செய்ய ஒரு வினாடிக்கும் குறைவாகவே ஆகும் என்பது நிபுணர்களின் எச்சரிக்கை. இதற்கு அடுத்து இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் இரண்டாவது பாஸ்வேர்ட்டாக இருக்கிறது ‘12345’. இதை பாஸ்வேர்ட்டாக சுமார் 1,289,266 இந்தியர்கள் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாஸ்வேர்ட்டையும் ஹேக்கர்ஸ் உடைக்க ஒரு நொடி கூட ஆகாது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் ‘123456’ ஆகும்.

Also read... "சாணம், கோமியம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும்".. மாட்டுச்சாணம் சாப்பிட்ட படி வீடியோ வெளியிட்ட மருத்துவர்..!

password மற்றும் 12345 இவற்றை தவிர இந்தியர்கள் பயன்படுத்தும் சில பொதுவாக பயன்படுத்தி வரும் சில பாஸ்வேர்ட்கள் 123456, 123456789, 12345678, 1234567890, 1234567, qwerty, abc123 ​‘india123’, ‘xxx’, ‘iloveyou’, ‘krishna’ மற்றும் ‘omsairam’ உள்ளிட்டவையாக இருக்கின்றன. இதில் "india123" என்பதை தவிர மற்ற அனைத்து பாஸ்வேர்ட்களும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கிராக் அதாவது சிதைக்கப்படும் என்று NordPass தெரிவித்துள்ளது. India123-ஐ கிராக் செய்ய குறைந்தது 17 நிமிடங்கள் ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை தவிர அதிக மக்கள் தங்கள் பெயர்களையே பாஸ்வேர்ட்களாக பயன்படுத்த விரும்புவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனிடையே NordPass-ன் CEO ஜோனாஸ் கார்க்லிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பாஸ்வேர்ட்கள் நமது டிஜிட்டல் வாழ்க்கைக்கான நுழைவாயில் என்பதை புரிந்து கொள்வது அவசியம். நாம் ஆன்லைனில் அதிக நேரத்தை செலவிடுவதால், நம் இணைய பாதுகாப்பை சிறப்பாக கவனித்து கொள்வது மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: