ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கல்யாணம் என்றால் என்ன? வாய்விட்டு சிரிக்க வைக்கும் பள்ளி மாணவரின் பதில் வைரல்

கல்யாணம் என்றால் என்ன? வாய்விட்டு சிரிக்க வைக்கும் பள்ளி மாணவரின் பதில் வைரல்

 பள்ளி மாணவரின் பதில் வைரல்

பள்ளி மாணவரின் பதில் வைரல்

கல்யாணம் என்றால் என்ன என்ற 10 மதிப்பெண் கட்டுரைக்கு பள்ளி மாணவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பள்ளி பருவங்களில் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க பல்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுத வைக்கப்படுவது வழக்கம். அவை மாணவர்கள் பாடத்தின் மீது கொண்டுள்ள அறிவு மற்றும் புரிதல் திறனை வெளிப்படுத்தும். கட்டுரை தலைப்பு கொடுக்கப்படும் போதே ஒரு பக்கத்திற்கு மிகாமல் எழுதுக என்று இருக்கும். அப்படி ஒரு கட்டுரையில் பள்ளி மாணவர் எழுதி உள்ள வரிகள் படிப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. மாணவர் எழுதிய கட்டுரையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

  அந்த கட்டுரையில் திருமணம் என்றால் என்ன? என்ற தலைப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பள்ளி மாணவர், திருமணம் என்பது என்னவென்றால் ஒரு பெண்ணின் பெற்றோர் இப்போது நீ பெரிய பெண்ணாக ஆகிவிட்டாய். அதனால் எங்களால் உனக்கு உணவு அளிக்க இயலாது. உனக்கு உணவளிக்கும் சிறந்த ஆண்ணை நீ கண்டுப்பிடி. அதன்பின் அந்த பெண் ஒரு ஆண்ணை கண்டுபிடிக்கிறாள். ஆணின் பெற்றோர் அவனிடம் நீ பெரிய பையனாக ஆகிவிட்டாய் அதனால் நீ திரும்ணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். அதன்பின் இருவரும் தங்களை சோதித்து கொண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். பிறகு ஒன்றாக வாழ சம்மதித்து, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முட்டாள்தனமான செயல்களைச் செய்யத் தொடங்குகிறார்கள் என்றுள்ளார்.

  மாணவனின் இந்த கட்டுரைக்கு ஆசிரியர் பூஜ்ஜிய மதிப்புகளை அளித்து முட்டாள்தனமானது(Nonsense) என்று கட்டுரையின் மீது குறிப்பிட்டுள்ளார். மாணவரின் இந்த கட்டுரையின் புகைப்படம் ட்விட்டரில் பலவிதமான கமெண்ட்களை பெற்றுள்ளது. இந்த கட்டுரையை படித்தவர்கள் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral