Home /News /trend /

இப்படியொரு பீட்சாவை உலகில் எங்கும் பார்த்திருக்க முடியாது.. வைரலாகும் வீடியோ 

இப்படியொரு பீட்சாவை உலகில் எங்கும் பார்த்திருக்க முடியாது.. வைரலாகும் வீடியோ 

பீட்சா

பீட்சா

Pizza | பல ஆண்டுகளாக இருந்தாலும் மவுசு குறையாத உணவுகளில் இத்தாலிய உணவான பீட்சா முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

    பல ஆண்டுகளாக இருந்தாலும் மவுசு குறையாத உணவுகளில் இத்தாலிய உணவான பீட்சா முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சிக்கன் பீட்சா, வெஜ் பீட்சா, 4 சீஸ் பீட்சா, பெப்பரோனி பீட்சா மற்றும் பல விதமான பீட்சாக்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

    புதிய முயற்சிகளாக அவ்வப்போது செய்யப்படும் கிவி, ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற தனித்துவ பீட்சாக்களின் வீடியோக்கள் என பல புதிய பீட்சா ரெசிபிக்கள் சோஷியல் மீடியாக்களில் அப்லோட் செய்யப்பட்டு வைரலாவது வழக்கம். சமீபத்தில் இதை போல சோஷியல் மீடியாவில் அப்லோட் செய்யப்பட்ட ஒரு பீட்சா ரெசிபி வைரலாகி வருகிறது.

    நீங்கள் கிவி பீட்சா மற்றும் ஐஸ்கிரீம் பீட்சாவின் வீடியோக்களை பார்த்திருக்கலாம் அல்லது கேள்விபட்டிருக்கலாம். ஆனால் ஐஸ் பீட்சா பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? ஆம், ஐஸ் க்யூப்ஸை டாப்பிங்ஸாகப் பயன்படுத்தும் பீட்சா ரெசிபி தான் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் இன்டர்நெட்டில் வைரலான ஒரு வீடியோ செஃப் ஒருவர் ஐஸ் கட்டிகள் மற்றும் சீஸை பயன்படுத்தி பீட்சா தயாரிப்பதை காட்டுகிறது. இந்த வைரல் வீடியோ ‘Does He Bake Dough’ என்ற இன்ஸ்டா அக்கவுண்ட்டில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Does He Bake Dough (@doeshebakedough)






    இந்த வித்தியாசமான உணவு கலவையை கண்டு பல யூஸர்கள் ஷாக்காகியுள்ள நிலையில், இது ஏற்கனவே 1,12,000-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோ குறிப்பிட்ட அந்த செஃப் பீட்சா மாவை மென்மையாக பிசைந்து, அதை தனது கைகளால் விரித்து, பின் அதை அடுப்பில் வைப்பதற்கு முன் மூன்று ஐஸ் கட்டிகளை பீட்சா மாவின் மேலே போடுவதைக் காட்டுகிறது. ஐஸ் கட்டிகளை பீட்சா மீது வைத்ததை தொடர்ந்து அந்த சமையல் கலைஞர் அந்த பீட்சா மாவை அப்படியே எடுத்து வேக வைக்கிறார். பின் சுட வைக்கப்பட்ட அந்த பீட்சாவில் சிறிது துருவிய சீஸை மேலே பரப்புகிறார். தொடர்ந்து அவர் பீட்சாவின் மேல் வேறு பல காண்டிமென்ட்ஸ்களையும் சேர்க்கிறார்.

    விஷ தோட்டம்.. இந்த கார்டனில் உள்ள எந்த தாவரத்தையும் தொடவோ, நுகரவோ அனுமதியில்லை - ஏன் தெரியுமா.?

    எனினும் இந்த ஐஸ் பீட்சா வீடியோ சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்களிடமிருந்து கலவையான கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளது. சிலர் வித்தியாசமான ஐஸ் பீட்சாவுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். "இந்த வீடியோவை எனது இத்தாலிய நண்பர் ஒருவரிடம் காட்டினேன், ஆனால் பார்த்த வேகத்திற்கு அவர் இறந்துவிட்டார்" என்று ஒரு யூஸர் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு யூஸர் வித்தியாசமான ரெசிபி என்ற பெயரில் ஒரு பிரபல உணவை கெடுக்கும் தைரியம் இந்த மனிதனுக்கு எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஐஸ் க்யூப்ஸ் கொண்ட பீட்சாவை கண்டு உண்மையில் பல நெட்டிசன்கள் மற்றும் உணவுப் பிரியர்களும் சற்று ஷாக்காகி இருக்கிறார்கள் என்பதை பல கமெண்ட்ஸ்களின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி