இயந்திரமான வாழ்க்கைச் சூழலில் மக்கள் மிக வேகமாக இயங்கிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை. இதனால், மனச்சோர்வு மற்றும் உடல்சோர்வு போன்றவை ஏற்படும் நிலையில், அவற்றில் இருந்து வெளிவருவதற்கான உத்திகளை கையாள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, மனச்சோர்வில் இருந்து நம் சிந்தனைகளை விலக்கி, மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்க வேண்டியுள்ளது.
அதுபோன்ற உத்திகளில் ஒன்றாக ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்றப் படங்கள் உள்ளன. நாம் பார்க்கும் ஒவ்வொரு கோணத்திற்கு தகுந்தாற்போல மாறும் வகையில் அல்லது உற்று நோக்கும்போது நிறைய தெரிந்து கொள்ளும் வகையில் அல்லது தொடர்ந்து பார்க்கும்போது நம் சிந்தனையில் அது வேறு மாதிரியாக தோன்று வகையில் என வெவ்வேறு வடிவங்களில் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் வருகின்றன.
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் உள்ளவற்றை நாம் கண்டுபிடிக்க முயலும்போது நம் சிந்தனைத் திறனை அது தூண்டுவதோடு மட்டுமல்லாமல், மனதுக்கும் புத்துணர்ச்சி தருகிறது. இந்தச் செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் மாயத்தோற்ற படத்தை நாம் பார்த்த உடனே நம் கண்களுக்கு முதலில் என்ன தென்படுகிறதோ, அதைப் பொருத்து நம் குணாதிசயம் என்னவென்று கூறப்படுகிறது.
மாயாஜால வித்தைகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். ஆனால், ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத் தோற்றத்தின் அடிப்படையில் அமைந்த இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, உங்களால் உங்கள் கண்களையே நம்ப முடியாது. பொழுதுபோக்காக ஒரு படத்தில் ஒளிந்திருக்கும் விஷயங்களை கண்டறியும் அதே வேளையில், நம் குணாதிசயம் என்ன என்பதையும் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாக இது அமைகிறது. இப்போது படத்தைப் பாருங்கள்.
Also Read : ஒரே ஒரு சிப்ஸ் ரூ1.63 லட்சமாம்.. இ-பே தளத்தில் வலம் வரும் விநோத விளம்பரம்!
ஒரு நாயின் தலை : ஒரு நாயின் தலை தெரிந்தால் நீங்கள் மற்றவர்களுடன் நட்பாக பழகக் கூடியவர் என்று அர்த்தம். எதையும் நீங்கள் வெளிப்படைத்தன்மையுடன் பேசுவீர்கள். மற்றவர்கள் யாரும் உங்களை எளிதில் காயப்படுத்திவிட முடியாது. அன்பும், கனிவும் நிறைந்த நபர் நீங்கள். மற்றவர்கள் உங்கள் மீது கோபம் கொண்டு பேசினாலும் கூட, நீங்கள் சட்டென்று அதற்கு எதிர்வினை ஆற்றாமல், நிதானமாக பதில் அளிக்கக் கூடிய பொறுமைசாலி நீங்கள்.
வால்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் இரண்டு பூனைகள் : வால்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் இரண்டு பூனைகள், அதோடு அவற்றுக்கு இடையே மிதக்கும் இதயம் ஆகியவை உங்கள் கண்களுக்கு தெரிகிறதா? அப்படியானால், நீங்கள் அறிவு மிகுந்தவர். அதே சமயம், கடகடவென பேசுவதை விரும்பாத அமைதியான சுபாவம் கொண்டவர். பிறர் தேடி வந்து பேசினாலும் விலகியிருக்க விரும்புவீர்கள். மேலும், நீங்கள் திறந்த மனதுடையவராகவும், உணர்ச்சி கொள்பவராகவும் இருப்பீர்கள்.
இப்போது உங்கள் குணாதிசயம் என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்கும். அத்துடன் இந்தப் படத்தை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு ஃபார்வேர்டு செய்து வைத்து, அவர்களின் எண்ணங்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.