அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ப்ரீலான்ஸ் பத்திரிகையாளரிடம் கேட்கப்பட்ட கேள்வி இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வளரும் நாடு, வளர்ந்த நாடு, வளர்ந்து கொண்டிருக்கும் நாடு என எதுவாக இருந்தாலும் விமான நிலையத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். வல்லரசு நாடான அமெரிக்கா மாதிரியான நாடுகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சொல்லவே வேண்டாம். சந்தேகத்திற்குரிய நபர்களை தங்களது நாடுகளை உள்ளே விடுவே மாட்டார்கள். குறிப்பிட்ட நாட்டினர் என்றால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பும் சம்பவங்களும் அரங்கேறும்.
நவம்பர் 11 சம்பவத்திற்கு பிறகு அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்தில் உள்ளது. எந்த நேரத்திலும் தனது நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதும் அமெரிக்கா பயங்கரவாதிகள் பதுக்கியிருப்பதாக கருதும் நாடுகளில் இருந்து வரும் நபர்களை தீவிர பரிசோதனை செய்தே உள்ளே அனுமதிக்கிறது. அவர்களது ஆவணங்களில் சிறிய பிழைகள் இருந்தாலும் இதுதான் சான்ஸ் என உள்ளே விடாமல் வெளியே அனுப்பிவிடுகின்றனர்.
இவ்வளவு ஏன்? இந்தியாவைச் சேர்ந்த பல பிரபலங்கள் அமெரிக்க விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டும், சோதனை என்ற பெயரில் ஆடைகளைக் களைந்து அவமதிக்கப்பட்டும் உள்ளனர். இந்நிலையில், தற்போது அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் ‘கியாஸ்க்’ இயந்திரத்தின் மூலம் சுயமாக செக்-இன் செய்துகொள்ளும் பயணிகளிடம் கேட்கப்பட்டுள்ள பகீர் கேள்வி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த கேள்வியால் அதிர்ச்சியான ப்ரீலான்ஸ் பத்திரிகையாளரான ஆசாத் சாம் ஹன்னா என்ற நபர் அதனை ஸ்கீரின் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “அமெரிக்க விமான நிலையத்தின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிலை” என அதற்கு கேப்ஷன் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படத்தில், நீங்கள் தீவிரவாதியா? என கேள்வி கேட்கப்பட்டுள்ளதோடு, ‘ஆம்’, ‘இல்லை’ என பதிலளிக்கும் படி ஆப்ஷனையும் கொடுத்திருக்கிறார்கள்.
ஆசாத் சாம் ஹன்னா பதிவிட்டுள்ள இந்த ட்வீட் 2 ஆயிரம் லைக்குகளைக் கடந்து வைரலாகி வருகிறது. இது நெட்டிசன்களிடமிருந்து ஏராளமான எதிர்வினை கருத்துக்களை தூண்டி, விவாதமாக வெடித்துள்ளது. சிலர் இதனை காமெடியாக எடுத்துக் கொண்டாலும், பலரும் இந்த கேள்வியால் கடுப்பாகியுள்ளனர்.
Advanced level of security at the US airport. pic.twitter.com/j1AapagjbM
— Asaad Sam Hanna (@AsaadHannaa) April 5, 2022
ஆம் என்ற பொத்தானை தட்டினால் என்ன செய்வார்கள் என எனக்கு சொல்ல முடியுமா? என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவரோ "இது ஒரு நகைச்சுவையாக இருக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார். “இது நிஜமாகவே உண்மை தானா?” என பலரும் அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பு முக்கியம் தான் என்றாலும் இதுபோன்ற அநாவசியமான கேள்விகளை கேட்டு, பயணிகளின் பொறுமையை சோதிக்காமல் இருப்பது நல்லது என பலரும் கருத்து கூறியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறினாலும், இதுகுறித்து அமெரிக்க தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் தரப்படவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.