Home /News /trend /

சத்தியமா நம்புங்க... இது ஐஸ்கிரீம் தான்... உணவுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த உணவகம்!

சத்தியமா நம்புங்க... இது ஐஸ்கிரீம் தான்... உணவுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த உணவகம்!

உணவுப்பிரியர்களை ஷாக்காகிய டோக்கியோ உணவகம்!

உணவுப்பிரியர்களை ஷாக்காகிய டோக்கியோ உணவகம்!

Weird dish in tokyo | வித்தியாசமான கிரே ஐஸ்கிரீமின் போட்டோக்கள் ட்விட்டரில் 2.2 லட்சத்திற்கும் அதிகமான லைக்!

    ஐஸ்கிரீம் என்றாலே மென்மையான, குளிர்ச்சியான, கிரீமியான தோன்றம் தான் நம் கண்முன்னே தோன்றும், ஆனால் ஜப்பானில் வைரலாகி வரும் புதுவித ஐஸ்கிரீம் போட்டோவை பார்த்து உணவுப்பிரியர்கள் பலரும் ஆச்சரியத்தில் திக்குமுக்காடி போயுள்ளனர்.

    ஜப்பானியர்கள் எப்போதுமே பாரம்பரிய உணவை விரும்பக்கூடியவர்கள். அவர்கள் உணவு மேஜையில் எப்போதுமே காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மீன், முட்டை, சோயா, சூப், அரிசி, கிரீன் டீ ஆகியன இடம் பெற்றிருக்கும். இவர்களது சமைக்கும் முறையும் வித்தியாசமானது மீனை பச்சையாக சாப்பிடுவார்கள், காய்கறிகளை லேசாக தீயில் வாட்டி உண்பார்கள். எந்த உணவை எப்படி சமைக்க வேண்டும் என தங்களுக்கு என தனி முறையை கொண்டுள்ளார்.

    பரம்பரிய உணவுப்பிரியர்களின் நாடான ஜப்பானியிலும் வித்தியாசமான சுவை மற்றும் வடிவத்தினாலான உணவுகள் பிரபலமடைவது உண்டு. தற்போது பார்க்க வால் பிளாஸ்டர் போலவே இருக்கும் ஒருவகை ஐஸ்கிரீம் ஜப்பான் உணவுப்பிரியர்களை கவர்ந்து வருகிறது. டோக்கியோவின் கின்சா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓபஸ் என்ற உணவகம் இந்த உணவகம் பார்க்க வால் பிளாஸ்டர் போன்ற தோன்றம் கொண்ட ஐஸ்கிரீமை விற்பனை செய்து வருகிறது.

    Read More: ஹெச்ஐவி ஊழியர்களை கொண்டு காஃபி ஷாப் திறப்பு: சமூகத்தை முன்நகர்த்தும் மருத்துவர்


    ஆம், நீங்கள் படிப்பது சரிதான். என்னடா இது சுவற்றில் இருந்த பிளாஸ்டரை பறித்து தட்டில் வைத்து கொடுத்துவிட்டார்களே என்று கூட நீங்கள் நினைக்கலாம். அந்த அளவிற்கு மெல்லிய சுவர் பிளாஸ்டர் சில்லுகளைப் போன்ற ஐஸ்கிரீமின் புகைப்படங்கள் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    உணவகம் இந்த வித்தியாசமான ஐஸ்கிரீமிற்கு ‘கிரே’ என்று பெயரிட்டுள்ளது. ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் மற்றும் பிஸ்தா மியூஸ் கலவையுடன் தயாரிக்கப்படுகிறது, வால் பிளாஸ்டர் டாப்பிங்கிற்கு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படும் மெரிங்கு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by ジェセ Jesse Ogundiran (@jesseogn)






     

    வித்தியாசமான கிரே ஐஸ்கிரீமின் போட்டோக்கள் ட்விட்டரில் 2.2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றன, அதே நேரத்தில் அதன் வித்தியாசமான தோற்றத்தால் நெட்டிசன்கள் திகைத்துப் போயுள்ளனர். வால் பிளாஸ்டர் போன்றிருக்கும் ஐஸ்கிரீமை கலாய்க்கும் விதமாக ஆன்லைன் வாசிகள் பலரும் விதவிதமான மீம்ஸ்களை ஷேர் செய்து வருகின்றனர். அந்த ஐஸ்கிரீமை ருசி பார்த்த நபர் ஒருவர், பரிமாறுவர் தனது டேபிளில் கொண்டு வைத்த போது அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக டோக்கியோவில் உள்ள அதே உணவகம் மிசோ ராமின் சூப் உடன் ஐஸ்கிரீம் கலந்து பரிமாறும் வீடியோ இணையத்தில் வைரலானது. சூப் பவுலில் வெண்ணிலா மற்றும் சாக்லெட் பிளேவர் ஐஸ்கிரீமை அதன் கேனுடன் சர்வ் செய்யும் வீடியோ ஒன்றும் தாறுமாறு வைரலானது. அதன் விலை 10 டாலர்கள் ஆகும். காரம் மற்றும் இனிப்பு சுவையுடன் பரிமாறப்பட்ட அந்த சூப் நூடுல்ஸ் சோசியல் மீடியாவில் வைரலான சில நாட்களிலேயே ஓட்டல் நிர்வாகம் முற்றிலும் வித்தியாசமான மற்றொரு ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தி உணவுப்பிரியர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Tokyo, Trending, Viral

    அடுத்த செய்தி