முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / விசித்திரமான கனவுகள் நமது மூளையை ஆரோக்கியமாக்கும் - சமீபத்திய ஆய்வில் தகவல்!

விசித்திரமான கனவுகள் நமது மூளையை ஆரோக்கியமாக்கும் - சமீபத்திய ஆய்வில் தகவல்!

அப்போது DeepMind கூகுள் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ட் புரோகிராம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்துள்ளார்.

அப்போது DeepMind கூகுள் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ட் புரோகிராம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்துள்ளார்.

அப்போது DeepMind கூகுள் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ட் புரோகிராம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்துள்ளார்.

  • Last Updated :

கனவுகள் என்பது நமக்கு நிறைவேறாத ஆசைகள், எண்ணங்கள் கனவுகளாக வெளிப்படும் என்று சிக்மன்பிராய்டு தெரிவிக்கிறார். கனவுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் கனவுகள் பற்றிய மர்மம் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

கனவுகள் நம்மை உண்மைக்கு தயார்படுத்தும் ஒரு வழி என்கிறது சமீபத்திய ஆய்வு. அமெரிக்காவில் உள்ள டுஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் (Tufts University in Massachusetts) நியூரோசைன்ஸ் ஆய்வு உதவி பேராசிரியர் எரிக் கோயல் Over Fitted Brain என்ற ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். இதற்காக அவர் ஆர்டிஃபிசியல் நியூரல் நெட்வொர்க்ஸை மெஷின் லேர்னிங் போல படித்துள்ளார். அப்போது DeepMind கூகுள் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ட் புரோகிராம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்துள்ளார்.

அதாவது மிஷின் லேர்னிங்கில் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்ய வைக்கப்படுகிறது. அதன் மூலம் மிஷின் ஒரு வேலையை திறம்பட செய்கிறது. ஆனால் அதில் இருந்து எதையும் கற்றுக்கொண்டு அதன் மூலம் பெற்ற அறிவை அடுத்த வேலைக்கு பயன்படுத்த தெரியவில்லை. நம்முடைய மூளை நாம் சோர்வாக இருக்கும் போது, டல்லாகவோ இருப்பதை இந்த கனவுகள் தடை செய்கிறதாம். இது நம்முடைய மூளையை ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள உதவுகிறது. டிவி நிகழ்ச்சிகள், நாவல்கள், திரைப்படங்கள், வீடியோ கேம்கள் ஆகியவை நீண்ட நேரம் நம்மை கவனத்தை வேறு திசையில் திருப்பி நமக்கு பெரிதும் உதவுகிறது.

கனவுகளானது நம்மை தினசரி வாழ்வில் இருந்து நம்மை தப்பிக்க வைக்கிறது. எனவே நம் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். இது ஒரு வகையில் முரண்பாடாக இருக்கலாம். ஆனால் பறப்பது போன்ற ஒரு கனவு உங்களை மூளையின் இயக்கத்தை சமநிலையில் வைத்திருக்கும் என்றார். நமக்கு பெரும்பாலும் நமது கனவுகள் முழுமையாகத் தான் தெரியாது. அரைகுறையாகத் தான் நியாபகம் இருக்கும். சில நேரங்களில் கனவுகள் இனிமையாகவும் இருக்கலாம். அல்லது நம் நிம்மதியை குலைக்கும் வண்ணமும் இருக்கலாம்.

பொதுவாக நம் ஊர்களில் கனவுகள் பற்றிய சில நம்பிக்கைகள் இருக்கும். அதாவது 'பகல் கனவு பலிக்காது. அதிகாலை கண்ட கனவு பலிக்கும்' என்று நம் வீட்டு பெரியோர்கள் கூறுவர். இதற்கு அடிப்படைக் காரணமாக சொல்லப்படுவது, பகலில் நாம் ஆசைப்படும் விஷயங்களை கனவாக காண்போம். அது நாம் அறிந்தே அதனை செய்வோம். அதில் நீண்ட நேரம் லயித்திருப்போம். அதனால் வேலை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் இப்படி கனவு கண்டுகொண்டே இருந்தால் நல்லதற்கு இல்லை என்பதற்காக அப்படிக் கூறுவர்.

Also read... கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ளும் 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு காத்திருக்கும் 1 மில்லியன் டாலர் பரிசு!

மேலும் அதிகாலையில் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போம். அது நம்மை அறியாமல் ஆழ்மனதில் இருப்பவை கனவாக வரும். சிலருக்கு நடப்பவை முன் கூட்டியே கனவாக வரும் என்று கூறுவர். இப்படி விசித்திரமான கனவுகள் பற்றிய நிறைய கதைகள் இருக்கின்றன. கனவு காணுங்கள் என அப்துல் கலாம் சொன்னதும், கனவுகள் நம் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் என இந்த ரிக்கும் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். கனவுனால நல்ல விஷயம் நடக்கும்னா கனவுகள் நல்லது. கனவு காண்போம்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Dream