திருமணம் என்றாலே அனைவரையும் கவரும் வகையிலான பிரம்மாண்ட ஆடைகள், நகைகள், விழாவில் பரிமாறப்படும் இனிப்புகள் மற்றும் சாப்பாடுகளில் தான் அதிக கவனம் செலுத்துவோம். இருந்தப்போதும் இன்றைக்கு உள்ள தலைமுறைகள் மற்றவர்களை விட எப்படி தன்னுடைய திருமணத்தை டிரெண்டிங் ஆக்குவோம் என மெனக்கெடுகிறார்கள். இப்படித் தான் தன்னுடைய திருமணத்திற்கு வரக்கூடிய விருந்தினர்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் கேக்கிலும் ஆடைகள் செய்யலாம் என நிரூபித்த சுவிட்சார்லாந்தைச் சேர்ந்த நடாஷா என்ற பெண்ணின் செயல் தான் தற்போது வைரலாகி வருகிறது. என்ன நடந்தது? என இங்கே நாமும் அறிந்துக் கொள்வோம்.
திருமண ஆடையில் கேக்… சுவிட்சார்லாந்தின் பெர்ன் பகுதியில் ஸ்வீட்டி கேக்ஸ் என்ற பேக்கரியை நடாஷா கோய்னா என்ற பெண் நடத்தி வருகிறார். இங்கு புதுவிதமான கேக்குகளை வடிவமைப்பதோடு, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தனித்துவமாக செயல்படுகிறது நடாஷாவின் பேக்கரி. இந்நிலையில தான் சுவிட்சார்லாந்தின் உலக திருமண கண்காட்சி கடந்த ஜனவரியில் நடைபெற்றது. அதற்கு வித்தியாசமாக கேக்குகளை தயார் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பல முயற்சிகளை எடுத்துள்ளார் நடாஷா.
இந்த முயற்சியில் தான் பெண்கள் அணியும் வகையில் சுமார் 131.15 கிலோ எடையுள்ள திருமண ஆடை வடிவிலான கேக் ஒன்றை வடிவமைத்து காட்சிப்படுத்தினார். இதில் பல அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டதோடு, பாரம்பரிய திருமண உடை மரபுகளாகவும் இருந்து.
Read More : வைரலாகும் மணப்பெண்ணின் சிகை மற்றும் நகை அலங்காரம்..! அப்படி என்ன ஸ்பெஷல்!
இதோடு இதில் ராயல் ஐசிங் மற்றும் ஸ்வீட் ஹார்ட் நெக்லைன் ஆகியவற்றால் செய்யப்பட்ட பூக்கள் நிறைந்து காணப்பட்டது. இந்த கேக் ஆடை பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. எப்படி இதை செய்திருந்தார் என அனைவரையும் யோசிக்க வைத்த நிலையில், தான் நடாஷாவின் முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய அணியக்கூடிய கேக் தயாரித்துள்ளார் என்பதைப் பாராட்டி இவருக்கு கின்னஸ் உலக சாதனை பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இது தொடர்பான வீடியோ ஒன்றை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அவர்களது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். இதோடு இப்படியெல்லாம் கேக்கை செய்யமுடியாமா? நிச்சயம் நடாஷா பாராட்டுதலுக்கு உரியவர் என்பது போன்ற கமென்ட்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர். சோசியல் மீடியாவில் லைக்குகளும், வாழ்த்துக்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்துவருகின்றனர்.
தற்போது உலகம் முழுவதும் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு மற்றவர்களைக் கவரும் வகையில் ஏதாவது ஒன்றை செய்ய முயற்சிக்கின்றனர். இந்த வரிசையில் வித்தியாசமாக கேக் ஆடை தயாரித்திருப்பது அனைவரையும் வியப்பின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெண் நினைத்தால் எதையும் வித்தியாசமாக மற்றும் புதுமையாக செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் சுவிட்சார்லாந்தைச் சேர்ந்த இப்பெண் என்று சொன்னால் அது மிகையாகாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.