• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கடவுள் சிலைகளுக்கும் ’மாஸ்க்’ : உத்தரப் பிரதேச கோயில் நிர்வாகத்தின் புது யோசனை

கடவுள் சிலைகளுக்கும் ’மாஸ்க்’ : உத்தரப் பிரதேச கோயில் நிர்வாகத்தின் புது யோசனை

கடவுளுக்கு மாஸ்க்

கடவுளுக்கு மாஸ்க்

சிலைகளுக்கு முக மூடி அணிவிப்பதை பார்க்கும் பக்தர்கள் அதனால் விழிப்புணர்வு அடைந்து தானும் முக மூடி அணிந்துகொள்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    டெல்லியில் தீபாவளி முடிந்ததையொட்டி காற்று மாசுபாடு கடுமையான அளவில் அதிகரித்துள்ளது. காற்று மாசுப்பாட்டிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள், மக்களுக்கான விழிப்புணர்வு ஆகியவை அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களை வீட்டிற்குள்ளும், வெளியே வரும்போதும் கட்டாயம் முக மூடி அணிய அறிவுறுத்தப்படுகிறது.

    இந்நிலையில் வாரணாசியில் கோவில்களில் உள்ள சிவன் சிலை, துர்கை, காளி  சிலைகளுக்கும் முகமூடி அணிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அந்தக் கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது “சிலைகளை ஒவ்வொரு பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப அலங்கரிப்போம். கோடைக்காலத்தில் சந்தனம் பூசி குளுமைப்படுத்துவோம். குளிர்காலத்தில் கம்பளி போர்த்துவோம். அந்தவகையில் தற்போது காற்றுமாசு அதிகரித்து மக்கள் முக மூடி அணிந்திருப்பதால் கடவுளுக்கும் அணிவித்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

    அங்கு வழிபடும் பக்தர்களிடம் கேட்டபோது “ சிலைகளுக்கு முக மூடி அணிவிப்பதை பார்க்கும் பக்தர்கள் அதனால் விழிப்புணர்வு அடைந்து தானும் முக மூடி அணிந்துகொள்கின்றனர்” என்று கூறியுள்ளனர்.



    மேலும் ”இந்த காற்று மாசுபாடிற்கு ஒவ்வொருவருமே காரணம். இதை முக மூடிகள் அணிவதால் மட்டும் மாற்றிவிட முடியாது. காற்றை மாசுபடுத்தும் பழக்கங்களைக் கைவிடுவதே இதற்கான சிறந்த மாற்றம். இந்த மாற்றத்தை மக்கள் அனைவரும் சேர்ந்து செயல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: