ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இங்க யாருக்கும் சம்பளம் தரல.. லைவில் போட்டுடைத்த செய்தி வாசிப்பாளர் - ஷாக்கான நேயர்கள்

இங்க யாருக்கும் சம்பளம் தரல.. லைவில் போட்டுடைத்த செய்தி வாசிப்பாளர் - ஷாக்கான நேயர்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

செய்தி நிறுவனம் வீடியோவை டெலிட் செய்ய கலிமினா அதனை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஜாம்பியாவைச் சேர்ந்த செய்திவாசிப்பாளர் ஒருவர் நிறுவனம் சம்பளம் தரவில்லை என லைவில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பிரேக்கிங் நீயூஸ் போடுற சேனலே பிரேக்கிங் நீயூஸா வந்தா எப்படி இருக்கும். ஜாம்பியா நாட்டில் அப்படி ஒரு தரமான சம்பவத்தை நீயூஸ் ரீடர்  ஒருவர் செய்துகாட்டியுள்ளார். ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் உள்ள கேபிஎன் செய்தி சேனலின் வாசிப்பாளரான கன்டின்டா கலிமினா நியூஸ் லைவில் கம்பெனி எங்களுக்கு சம்பளம் தரல. இங்க யாருக்மே தரலன்னு குறைகளை கொட்டித்தீர்க்க ஆரம்பிச்சுட்டாரு.

  கன்டினா கலிமினா வழக்கம் போல லைவில் செய்தி வாசிக்கத்தொடங்கினார். தலைப்புச் செய்திகள், சர்வதேச செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தவர் திடீரென, கொஞ்ச நேரம் இந்த செய்திகளை எல்லாம் ஓரமாக வைப்போம் என ஆடியன்ஸ் நோக்கி பேச ஆரம்பித்தார். நாங்களும் மனிதர்கள்தான் எங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். கேபிஎன் சேனல் இங்கு யாருக்குமே ஊதியம் வழங்கவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஷாரோனுக்கு வழங்கவில்லை. ஏன் எனக்கும் ஊதியம் வழங்கவில்லை. எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். எனக் கூறி நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தினார். செய்தி நிறுவனம் உடனடியாக லைவ் நிறுத்தி பிரேக் விட்டது. இருப்பினும் இந்த வீடியோ அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த கேப்ஷனில், “நான்தான் இதை டிவி லைவ் செய்தேன். இங்கு பெரும்பாலான பத்திரிகையாளர்கள் பேச அச்சப்படுகிறார்கள். அதற்காக பத்திரிகையாளர்கள் பேசக் கூடாது என்ற அர்த்தமில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

  இதுகுறித்து கேபிஎன் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், கனிண்டா குடித்துவிட்டு செய்தி வாசித்ததால் அவர் அவ்வாறு உளறியுள்ளார். இது மிகவும் தவறான நடவடிக்கை. குடித்துவிட்டு அவர் எப்படி செய்திவாசிக்க சென்றார் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Africa, Live, News, Viral, Viral Video