ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

10 வினாடிகள் தான் டைம்..! முடிந்தால் மறைந்திருக்கும் ஆங்கில எழுத்தை கண்டுபிடியுங்கள்.!

10 வினாடிகள் தான் டைம்..! முடிந்தால் மறைந்திருக்கும் ஆங்கில எழுத்தை கண்டுபிடியுங்கள்.!

மூளைக்கு வேலை ஆப்டிகல் இல்யூசன்

மூளைக்கு வேலை ஆப்டிகல் இல்யூசன்

ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் புதிர்களை கண்டறிய கண்கள் மற்றும் மூளையையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் மத்தியில் சில விஷயங்கள் அதிக வரவேற்பை பெறும். அந்த வகையில் சுவாரசியம் மற்றும் சவால் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. நம் கண்களை ஏமாற்றி மூளையை குழப்பும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நம்மை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாக வைக்க உதவுகின்றன.

இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரையும் கவரும் ஒன்றாக இவை இருந்து வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் புதிர்களை கண்டறிய கண்கள் மற்றும் மூளையையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அவ்வப்போது ஆன்லைனில் வைரலாகி வரும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நமது கவனிக்கும் திறன்களை சோதிப்பவையாகவும் இருக்கின்றன.

இவற்றின் ஸ்பெஷல் என்னவென்றால் நம் ஆர்வத்தைத் தூண்டி மறைந்திருக்கும் புதிரை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் மண்டையை காய்ந்து போகும் வைக்கும் அளவிற்கான ஆப்டிகல் இல்யூஷன்களும் வைரலாகும். இவற்றில் மறைந்திருக்கும் புதிரை அல்லது மறைந்திருக்கும் உருவங்களை கடைசி கண்டறிய முடியாமல் திணற வேண்டி இருக்கும். இப்போது நாம் அப்டிப்பட்ட ஒரு ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை தான் பார்க்க போகிறோம்.

நீங்கள் கீழே பார்க்கவிருக்கும் ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் ஒரு ஆங்கில எழுத்தை தான் வெறும் 5 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் கூர்மையான பார்வை திறன் கொண்ட நபர்கள் மட்டுமே 5 வினாடிகளில் இல்லை என்றாலும் கூடுதல் ஒருசில வினாடிகளில் கண்டுபிடிப்பார்கள். நீங்களும் சரியாக அந்த ஆங்கில எழுத்தை கண்டறிய வேண்டும் என்றால் சில வினாடிகளில் இமேஜ் முழுவதையும் கவனமாக பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷனில் காட்டில் விளையாடும் சிறு குழந்தைகள் மற்றும் ஒரு யானை இருக்கிறது. பின்னணியில் மலையுடன் இருக்கும் இந்த வனகாட்சியில் ஆங்கில எழுத்தான F மறைந்திருக்கிறது. அதை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

மேலே உள்ள ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை பார்த்து விட்டீர்களா.! 5 வினாடிக்குள் இல்லாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் 15 வினாடிகளுக்குள்ளாவது மறைந்திருக்கும் F-ஐ கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் உங்களுக்கு சிறு க்ளூ தருகிறோம். மறைந்திருக்கும் F-ஐ கண்டறிய இமேஜின் வலது பக்கத்தை கூர்ந்து பாருங்கள். இப்போதும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் படத்தில் இருக்கும் யானையின் மீது கவனம் செலுத்துங்கள். இரண்டாவது க்ளூவும் உங்களுக்கு உதவவில்லை என்றால் கீழே சிவப்பு வட்டமிடப்பட்டிருக்கும் இமேஜை பார்த்து புதிருக்கான விடையை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆம், யானையின் மீது கவனம் செலுத்த சொன்னோமல்லவா.! யானையின் காதில் தான் ஆங்கில எழுத்தான F மறைந்திருக்கிறது. உங்களால் 10 வினாடிகளில் விடையை கண்டறிய முடியவில்லையே என்ற வருத்தம் வேண்டாம். ஏனென்றால் இந்த ஆப்டிகல் இல்யூஷனுக்கான பதிலை உரிய நேரத்தில் கண்டறியும் முயற்சியில் 100-க்கு ஒன்று அல்லது இரண்டு நபர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.

First published:

Tags: Optical Illusion, Trending, Viral