• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஒரு மானுக்காக சண்டையிட்டுக்கொண்ட 6 சிங்கங்கள் - வைரல் வீடியோ!

ஒரு மானுக்காக சண்டையிட்டுக்கொண்ட 6 சிங்கங்கள் - வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

சடலம் தரையில் விழுந்தவுடன் ஆறு சிங்கங்களும் தங்கள் உணவுக்காக சண்டையிடத் தொடங்குகின்றன.

  • Share this:
கடந்த சில வருடங்களாக சமூக ஊடக தளங்களில் விலங்குகளின் அழகான, வேடிக்கையான மற்றும் பயங்கரமான வீடியோக்கள் பல பகிரப்பட்டு வருகிறது. அதுவும் சமீப காலமாக காடுகளில் வசிக்கும் விலங்குகளின் வீடியோக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ஒரு மான் சடலத்திற்காக ஆறு சிங்கங்கள் சண்டையிடும் வீடியோ கிளிப் ஒன்று இணையத்தினுள் பரவலான மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்திய வன சேவைகள் (IFS) அதிகாரி சகேத் படோலா பகிர்ந்த அந்த வீடியோ, காட்டில் விலங்குகள் உயிர்வாழ்வதற்காக ஒன்றுக்கொன்று எவ்வாறு சண்டையிட்டுக்கொள்ளும் என்பதை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. படோலா அந்த வீடியோவை, " காட்டு வழி பாதையில்: ஒரு மான், 6 சிங்கங்கள்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். தலைப்புக்கு ஏற்றாற்போல அந்த வீடியோவில் ஒரு மான் சடலத்திற்காக 6 சிங்கங்களும் சண்டையிடும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோவின் ஆரம்பத்தில், ஒரு சிங்கம் மான் சடலத்தின் கழுத்து பகுதியை கவ்விக் கொண்டு ஒரு மரத்தின் மீது எறியுள்ளது. எப்படியாவது அந்த சடலத்தை தன்வசம் பிடிக்க வேண்டும் என்பதற்காக மற்றொரு சிங்கம் மான் சடலத்தின் காலை கவ்வி கொண்டு வலுவாக இழுக்கிறது. அதுவும் மரத்தில் தொங்கியபடி. இதனிடையே மரத்தில் மேலே மூன்றாவதாக ஒரு சிங்கமும் இருந்தது. ஆனால் இது இரையை பிடிக்கும் மற்ற சிங்கங்களின் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

தற்போது அந்த வீடியோவில் நான்காவது சிங்கம் ஒன்று மரத்தின் மீது ஏறி, மானின் உடலை கவ்விக்கொண்டது. மரத்தின் அடிவாரத்தில் மேலும் இரண்டு சிங்கங்கள் இரைக்காக நின்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மரத்தின் மேலே மானின் கழுத்தை கவ்விக்கொண்டிருந்த சிங்கம் மற்ற சிங்கங்களின் செய்கையால் பளு தாங்கமுடியாமல் இறைச்சியை கீழே விட்டு விடுகிறது.

ALSO READ |  திடீரென பிங்க் நிறத்திற்கு மாறும் ஏரிகள்... காரணம் என்ன?

சடலம் தரையில் விழுந்தவுடன் ஆறு சிங்கங்களும் தங்கள் உணவுக்காக சண்டையிடத் தொடங்குகின்றன. சிங்கங்களுக்குள் நடந்த சண்டையைக் கண்டு சம்பவத்தைப் பதிவு செய்துகொண்டிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் இந்த வீடியோவைக் கண்டு அதிக ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.

 



தகவல்களின்படி, இந்த வீடியோ ஆப்பிரிக்காவில் உள்ள ஜங்கிள் சஃபாரி எனும் இடத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட நேரம் மற்றும் காலம் குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. வீடியோவைப் பார்த்த பிறகு ஒரு பகுதி நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர், மற்றவர்கள் அதை வேடிக்கையாகக் கண்டனர்.

 



 



 

அதில் ஒரு ட்விட்டர் யூசர் குறிப்பிட்டுள்ளதாவது, "பசி மிகவும் துயரமானது. உணவு உயிர்வாழ்வதற்கு அடிப்படைத் தேவை." என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு யூசர் இந்த காட்சியை நேரில் பார்ப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று பதிவிட்டிருந்தார். இது ஒரு அற்புதமான கிளிப் என்று கமெண்ட் செய்த அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: