முதியவரை காப்பாற்றிய பெண் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

முதியவரை காப்பாற்றிய பெண்

கட்டுப்பாடு இல்லாமல் முதியவர் வருவதை அங்கு நின்று பார்த்து கொண்டிருந்த பெண்களில் ஒருவர், உடனடியாக ஓடி அவரைக் காப்பாற்றியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
எஸ்க்லேட்டரில் தவறி விழ இருந்த முதியவரை சரியான நேரத்தில் பெண் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சைனா போஸ்ட் மார்னிங் இணையத்தில் வீடியோ ஒன்றை அப்லோடு செய்துள்ளது. அதில், எஸ்க்லேட்டரில் வரும் முதியவர் ஒருவர் கீழே விழ இருந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், முதியவரை தடுமாறிக்கொண்டு வருவதைப் பார்த்து, உடனடியாக ஓடுகிறார். பின்னர், தடுமாறிக்கொண்டு வந்த முதியவரின் வீல் சேரின் முன் அமர்ந்து அவரை காயத்தில் இருந்து காப்பாற்றுகிறார்.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள சைனா போஸ்ட் மார்னிங், இந்த சம்பவம் நடக்கும்போது எக்ஸ்லேட்டரில் முதியவர் கத்திக்கொண்டு வந்துள்ளார். கட்டுப்பாடு இல்லாமல் முதியவர் வருவதை அங்கு நின்று பார்த்து கொண்டிருந்த பெண்களில் ஒருவர், உடனடியாக ஓடி அவரைக் காப்பாற்றியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் முதியவருடன் வந்த குழந்தை கீழே விழுந்துள்ளது. எக்ஸ்லேட்டரில் முதியவர் தடுமாற தொடங்கியவுடன், அவரின் கையில் இருந்த குழந்தை எக்ஸ்லேட்டரில் விழுந்து காயமடைந்தது. இருப்பினும், அங்கிருந்த பெண்கள் குழந்தையை எடுத்து முதலுதவி கொடுத்தனர். சிறு காயங்களுடன் குழந்தையும் விபத்தில் இருந்து தப்பியது.

Also read... டேட்டிங் ஆப்பில் கிடைத்த பிளாஸ்மா - கோவிட் நோயாளிக்கு நெகிழ்ச்சி சம்பவம்!

முதியவரை காப்பாற்றிய பெண் செய்தி தளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், "எக்ஸ்லேட்டரில் ஒருவர் கத்துவதை கேட்டவுடன் திரும்பிப் பார்த்தேன். முதியவர் ஒருவர் வீல் சேரில் தாறுமாறாக வருவதை உணர்ந்து அவரைக் காப்பாற்ற ஓடினேன். நான் காயம் பட்டிருந்தாலும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். முதியவரின் அருகில் ஓடியவுடன் வேகமாக வந்த வீல் சேரை தடுத்து நிறுத்துவதற்காக தரையில் முதியவரின் வீல் சேருக்கு நேராக அமர்ந்து கொண்டேன். ஒருவழியாக தட்டுத்தடுமாறி அவரை தடுத்து நிறுத்தினேன்". பெண் சமயோசித்தமாக செயல்பட்டது குறித்து நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

அண்மையில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள வாங்கினி ரயில் நிலையத்தில் கண் தெரியாத பெண் ஒருவரின் குழந்தை ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்தது. அதனை அங்கிருந்த ரயில்வே பணியாளர் மயூர் ஷெல்கே பார்த்துவிட்டார். குழந்தை விழுந்த சிறிது தொலைவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றும் வந்து கொண்டிருந்தது. துரிதமாக செயல்பட்ட மயூர்ஷெல்கே தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்தக் குழந்தையை ஓடிச் சென்று காப்பாற்றினார். நொடிப்பொழுதில் மிகப்பெரிய உயிர்ச்சேதத்தை தவிர்த்த அவரின் முயற்சி நாடு முழுவதும் பாராட்டைப் பெற்றது. அவரின் இந்த தியாகச் செயலுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இதில் பாதித் தொகையை தண்டவாளத்தில் விழுந்த கண் தெரியாத பெண்ணின் குடும்பத்துக்கு மயூர் ஷெல்கே வழங்கினார் அனைவரையும் மேலும் ஆச்சர்யப்படுத்தினார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: