Home /News /trend /

நீ வேண்ணா சண்டைக்கு வா... இரவில் நடுரோட்டில் கெத்து காட்டிய காட்டு யானை.! - வைரல் வீடியோ

நீ வேண்ணா சண்டைக்கு வா... இரவில் நடுரோட்டில் கெத்து காட்டிய காட்டு யானை.! - வைரல் வீடியோ

யானை

யானை

Elephant Viral Video | அஸ்ஸாம் மாநிலத்தில் காட்டு யானை ஒன்று இரவில் ஊருக்குள் புகுந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை உதித்து ஆக்ரோஷத்துடன் கடந்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Assam, India
நம்மூர் காமெடி நடிகர் வடிவேலு ஒரு படத்தில் ரவுடியை போல வேடம் அணிந்து கொண்டு, சுற்றியுள்ள பெட்டி கடைகளையெல்லாம் அடித்து நொறுக்கி ஆக்ரோஷத்துடன் குரல் கொடுப்பார். கிட்டதட்ட அதே பாணியில் யானை ஒன்று நாடு இரவில் ஊருக்குள் புகுந்து அனைவரையும் அலற வைத்து கெத்து காட்டியுள்ளது.

அசாம் மாநிலம் டெஸ்பூர் என்னுமிடத்தில் இரவில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் இறங்கி வலம் வரும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்தக் காட்டு யானை ஆக்ரோஷத்துடன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை காலால் உதைத்து தள்ளிவிட்டு, பிளிறலுடன் ஆக்ரோஷமாக கடந்து செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

“பிகாஸ் அதிகாரி” எனும் நபர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் “அன்புள்ள அம்மா, நான் டெஸ்பூரில் இருக்கிறேன். இந்த யானை மிக சர்வ சாதாரணமாக என்னுடைய வீட்டை கடந்து செல்கிறது. இது காட்டு விலங்குகளின் வாழ்க்கை எந்த அளவிற்கு மோசமாகி உள்ளது என்பதை நமக்கு காட்டுகிறது. இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு இதற்கு சரியான தீர்வை காண வேண்டும். மனிதர்களான நம்மை நினைத்தால் கேவலமாக உள்ளது, இயற்கை காப்போம்” என அந்த வீடியோவின் கீழ் குறிப்பிட்டுள்ளார். காடுகளை அழித்தல், மரங்களை வெட்டுதல் போன்ற நகரமயமாக்கல் காரணமாக வன விலங்குகளின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கபட்டுள்ளதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பி.டி.ஐ செய்தி நிறுவனம், அந்த காட்டு யானை கசிரங்கா தேசிய பூங்காவில் இருந்து தப்பித்து வரும் வழியில் பல வாகனங்களையும் பொதுச்சொத்துக்களையும் நாசம் செய்து உள்ளது. அதன் பிறகு பிரம்மபுத்திராவின் தெற்கு நதிக்கரையை கடந்து சென்று பிறகு டெஸ்பூரிலும் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Also Read : மனிதரை நோக்கி சீறி பாயும் முதலை.! நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகும் பயங்கர வீடியோ.!

முதலில் சன்மாரி எனப்படும் பகுதிகள் உள்ள ஒரு வீட்டினில் நுழைந்த அந்த யானை சாப்பாட்டிற்காக சமையலறையை ஆராய்ந்தது அதன் பிறகு டெஸ்பூர் துறைமுகத்தின் வழியாக சித்திரலேகா பூங்காவை அடைந்தது. மேலும் அந்த யானை பிரம்மபுத்திரா நதிக்கரையில் உள்ள விநாயகர் கோவில் வளாகத்திற்குள்ளும் சென்றதாக தெரிகிறது. அதன் பிறகு அங்குள்ள பேருந்து நிலையத்தை அடைந்த அந்த யானையை அங்குள்ள வனத்துறை அதிகாரிகள் விரட்டியடிக்க முயற்சித்தனர். ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் அந்த யானை கடந்து வந்த அதே வழியான பிரம்மபுத்திரா நதிக்கரை வழியாகவே அந்த யானையை விரட்டி விட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Also Read : நீதிபதி, போலீசாரை பாடாய்படுத்திய குறும்புக்கார குரங்கு - வைரல் வீடியோ

அந்த யானையால் பொதுசொத்துக்கள் சேதமடைந்ததை தவிர, அது யாரையும் தாக்கவில்லை என்பதும் யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Elephant, Trending, Viral Video

அடுத்த செய்தி