பொதுவாக உணவு சார்த்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம் தான் என்றாலும் அதில் சில வீடியோக்கள் நம்மை வாய்பிளந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும். அதே போன்று, எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்கிற எண்ணமும் நமக்கு உண்டாகும். அப்படியொரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் யாராக இருந்தாலும், ஒரு நொடி ஸ்தம்பித்து போய்விடுவார்கள். ஆம், தர்பூசணி பழத்தை கொண்டு இந்த நபர் பீட்சா, பார்பிக்யூ போன்ற வகை வகையான உணவுகளை சமைத்து அசத்துகிறார். இந்த வீடியோ பலரது ஆர்வத்தையும், விருப்பத்தையும் பெற்றுள்ளது.
இப்போதெல்லாம், பழங்கள் கொண்டு பீட்சாவை டாப்பிங் செய்வது ஒரு டிரெண்டிங்காக உள்ளது. முன்னதாக, பீட்சாவில் அன்னாசிப்பழம் மேல்புறம் இருக்கும் வீடியோ, உணவுப் பிரியர்களின் கலவையான கமெண்ட்ஸ்களை பெற்றது. சிலர் பீட்சாவில் அன்னாசிப்பழங்களைச் சாப்பிட்டு மகிழ்ந்தனர், மேலும் சிலர் இது போன்ற பீட்சாவை வெறுத்தனர். இது பீட்சாவின் உண்மையான ருசியை கெடுக்கிறது என்றும் கூறினார்.
இந்நிலையில், முழு பீட்ஸாவையே தர்பூசணியை கொண்டு இங்கு ஒரு நபர் தயார் செய்துளளர். '9GAG: Go Fun The World' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்பூசணி பீட்சா வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் தொடக்கத்தில், ஒரு பீட்சாவை சாப்பிடுவது போன்று காட்சி அமைந்துள்ளது. ஆனால், உண்மையில் அது நாம் நினைப்பது போன்று சாதாரண பீட்சா கிடையாது. அது ஒரு தர்பூசணி பழத்தால் தயாரித்த பீட்சா என்பதை பின்னர் தெளிவுப்படுத்தி உள்ளார். மேலும் இந்த வீடியோவில் எப்படி 'தர்பூசணி பீட்சா' தயாரிக்க வேண்டும் என்பதையும் விரிவாக கூறியுள்ளார்.
Also Read : விமானத்தில் பிரேக்ஃபாஸ்ட் கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்.!
வறுக்கப்பட்ட தர்பூசணி துண்டை எடுத்து கொண்டு அதன் மீது சீஸ் மற்றும் பெப்பரோனி உள்ளிட்டவைகளை இவர் டாப் அப் செய்கிறார். மீண்டும் ஒருமுறை தர்பூசணி பீட்சா ஸ்லைஸை க்ரில் செய்தார். இங்கு வறுக்கப்பட்ட தர்பூசணி துண்டு ஒரு பீட்சாவின் அடித்தளமாக வேலை செய்கிறது, இது பார்ப்பதற்கு அசல் பீட்சாவை போன்றே உள்ளது. இதுவே பலருக்கு மூக்கின் மேல் கை வைத்து பார்க்க கூடிய அளவிற்கு இருக்கும். ஆனால், இதை விடவும் ஒரு அற்புதமான ஒரு ரெசிபியையும் அவர் அந்த வீடியோவில் செய்திருந்தார்.
View this post on Instagram
அது தான் தர்பூசணி பார்பிகியூ. இதை செய்ய ஒரு பாத்திரத்தில் தர்பூசணியை எடுத்து கொண்டு மேல் தோலை நீக்கி விடுகிறார். பின்னர் அதை அதன் மீது சிறிது பார்பிக்யூ சாஸை தடவுகிறார். அதன் பிறகு சில மசாலாக்களை சேர்க்கிறார். இதுவும் பார்த்தற்கு அசல் பார்பிகியூ போன்றே உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது ஐடியாவை பாராட்டி வருகின்றனர். இருப்பினும் சிலர் இது எப்படி சாத்தியம், நன்றாக இருக்காது போன்ற எதிர்மறையான கருத்துக்களையும் கூறி வருகின்றனர். இந்த வீடியோவை இது வரை 7.22 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Watermelon