ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சுற்றி வளைத்து தொல்லை கொடுத்த 6 ஆண்களை ‘அடி பொளந்தெடுத்த’ சிங்கப்பெண்... வைரல் வீடியோ! 

சுற்றி வளைத்து தொல்லை கொடுத்த 6 ஆண்களை ‘அடி பொளந்தெடுத்த’ சிங்கப்பெண்... வைரல் வீடியோ! 

Trending

Trending

Viral Video | பெரும்பாலும், பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தும் நபர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டிய பொறுப்பும் பெண்களையே சாருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மழலையர் பள்ளியில் தொடங்கி கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை, பணிபுரியும் இடம் என எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் தொடர்கின்றன. இல்லத்தரசிகளால் இருக்கும் பெண்களும் குடும்ப நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

பெரும்பாலும், பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தும் நபர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டிய பொறுப்பும் பெண்களையே சாருகிறது. பாலியல் வக்கிரத்துடன் நெருக்கும் நபரிடம் கெஞ்சி, கதறி, பதறி ஓடி வர வேண்டும் என்பது தேவையில்லை. பாலியல் தொல்லை நபர்களை அடி வெளுத்து விட்டு, கெத்தாக தப்பிக்கலாம் என்பதை ஒரு சிங்கப்பெண் நிரூபித்துள்ளார்.

தற்போது பெண்கள் படிப்பு, வேலை போன்ற விஷயங்களுக்காக வெளியே செல்ல வேண்டியதும், தனியாக தங்க வேண்டியதும் அவசியமாகியுள்ளது. இப்படிப்பட்ட சந்தர்பங்களை பயன்படுத்திக் கொள்ளும் சில கெட்ட எண்ணம் கொண்ட நபர்கள், பெண்களிடம் தங்கள் பாலியல் வக்கிரத்தை அரங்கேற்ற நினைப்பது உண்டு. அப்படிப்பட்ட தருணங்களில் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ள பெண்கள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்வது நல்லது என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

‘என்ன தான் தற்காப்பு கலையை கற்றுக்கொண்டாலும், ஆண்கள் சுற்றி வளைக்கும் போது ஒரு பெண்ணால் எப்படி சமாளிக்க முடியும், உதவி கேட்டு கூச்சலிட்டு தான் ஆக வேண்டும்’ என்ற பிற்போக்குத் தனமான வாதங்களை முன்வைப்போரும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று தக்க பதிலடி கொடுத்துள்ளது.

Also Read : தெரியுமா? இந்த 5 தீவு நாடுகளையும் விசா இல்லாமல் இந்திய பாஸ்போர்ட் மூலம் சுற்றி பார்க்கலாம்!

சும்மாவா பெரியவர்கள் சொல்கிறார்கள் ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்’ என்று, இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் தன்னை சுற்றி வளைத்து பாலியல் சீண்டல் கொடுத்த கும்பலை பெண் ஒருவர் ஒற்றை கையாலேயே சண்டையிட்டு தப்பிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அந்த வீடியோவில் ஆள்நடமாட்டம் இல்லாத தெருவில் 6 ஆண்கள் ஒரு பெண்ணை சுற்றி வளைத்து, பாலியல் ரீதியாகவோ அல்லது கேலி செய்யும் விதத்திலோ துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சிறிது நேரம் அந்த ஆண்களை தனது அருகில் வர விடாமல் சமாளிக்கும் அந்த பெண், சில விநாடிகளிலேயே தனது பொறுமையை இழக்கிறார். கையில் இருக்கும் ஹேண்ட்பேக்கை வைத்து 6 ஆண்களையும் அடி வெளுக்கிறார். தனக்கு தெரிந்த தற்காப்பு கலையை வைத்து, ஒற்றை கையாலும், கால்களாலும் சண்டையிட்டு அந்த 6 நபர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறார்.

Also Read : சைபர் குற்றங்களால் அதிகமான பாதிப்படைந்த நபர்களின் பட்டியலில் இந்தியாவின் இடம் பற்றிய அதிர்ச்சி தகவல்!

‘TheFigen’ என்ற ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள, சுமார் 25 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ இணையத்தில் தாறுமாறு வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதுவரை 3.5 மில்லியன் பார்வைகளையும், 9000க்கும் அதிகமான ஷேர்களையும் பெற்றுள்ளது. பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சமயத்தில் தனியொரு பெண்ணாக 6 ஆண்களை அலறவிட்ட சிங்கப்பெண்ணுக்கு இணையவாசிகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Trending, Viral Video