வாழ்க்கையில் சந்தோஷம், துக்கம், ஏமாற்றம், இழப்பு என அனைத்து விஷயங்களிலும் நம்முடனே தோள் கொடுத்து நிற்பவர்கள் தான் நம் தோழமைகள். ஆனால் அனைவருக்கும் இந்த நட்பு கிடைத்து விடுவதில்லை.. ஒரு சிலருக்கு மட்டுமே சிறந்த நண்பர்கள் வரமாகக் கிடைப்பார்கள். அதிலும் அலுவலக மற்றும் கல்லூரி நட்புகளை விட பள்ளிப்பருவ காலத்தில் ஏற்பட்ட நட்பு இன்றைக்கும் எப்போதும் நினைத்துப் பார்த்தாலும் நம் மனதை இதமாக்குகிறது என்று தான் சொல்ல வேண்டும். அறியாத வயதில் நம் நண்பர்களுடன் செய்த சிறு சிறு சேட்டைகள் எல்லாமே நமக்கு எப்போதும் மனதிற்கு இதமாகவே தோன்றும். அதுவும் இவர்களது நட்பு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தால் எப்படி இருக்கும்? இந்த தருணத்தை நிச்சயம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
இப்படி நட்புகள் வாழ்நாள் முழுவதும் தொடர்வது என்பது ஆண்களுக்கு சாத்தியமாகும். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது நிச்சயம் சாத்தியமற்றதாகவே உள்ளது. பெண்கள் திருமணத்திற்குப் பிறகும் குழந்தைப் பருவ நட்பை தக்கவைத்துக் கொள்வது மிகவும் கடினம். குழந்தைகள் மற்றும் குடும்பம் என அனைத்துப் பொறுப்புகளும் பெண்களின் தலையில் விழுவதால் நட்புகளுடன் நேரத்தை செலவிடுவது சாத்தியமற்றது. இந்நிலையில் நரைமுடி, வளைந்த முதுகுடன் வயதான காலத்தில் மீண்டும் பள்ளிப் பருவ தோழியை சந்தித்தால் என்ன செய்வீர்கள் நீங்கள்? இதோ இப்படித்தான் கேரளத்தைச் சேர்ந்த தோழிகள் இருவர் எட்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த அழகான வீடியோ நெட்டிசன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்ன இருந்தது?என நாமும் அறிந்துக் கொள்வோமா?
வயதானத் தோழிகளின் உணர்வுப்பூர்வ சந்திப்பு…
புகைப்படக் கலைஞரான முகல் மேனன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ஒரு சிறிய கிளிப் வீடியோவைப் பதிவிட்டிருந்தார். அதில் 80 ஆண்டுகளுக்கும் மேலான தனது நட்பை சந்திக்க வேண்டும் என அடிக்கடி தெரிவிக்கும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன் என்றும் இந்த சந்திப்பு என்னை மிகவும் கண்ணீரில் திகைக்க வைத்தது என்றார். “ ஒரு வயதான தோழி ஒருவர், காரில் இருந்து இறங்கிவருவது“ போன்ற வீடியோ ஆரம்பிக்கிறது. மெதுவாக தனது பள்ளிப்பருவ தோழி இருக்கும் அறைக்குள் சென்றதும் மாறி மாறி எப்படி இருக்கிறாய்? என தனது சந்தோஷத்தைப் பரிமாறிக்கொண்டது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. பொக்கை வாயுடன் வயதான பாட்டியின் மனதிலிருந்து எழுந்த புன்னகை மற்றும் அவர்கள் எடுத்துக் கொண்ட செல்பி வீடியோக்கள் அனைத்தும் வீடியோவில் இடம் பெற்றிருந்தது.
View this post on Instagram
இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “ இந்த சந்திப்பு விலைமற்றது“ எனவும் மற்றொரு பயனர் ஒருவர், அழகான சந்திப்பு, பாட்டிகளின் புன்னகைக்கு எதுவும் ஈடு இல்லை என தெரிவித்துள்ளனர். நிச்சயம் இவர்கள் வாழ்க்கையில் புண்ணியம் செய்தவர்கள் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Friendship, Tamil News, Trending, Viral Video