Home /News /trend /

வீட்டுக்குள் புகுந்த கரடி - கேக் சாப்பிட்டு, நீச்சல் குளத்தில் குளித்து குதூகலம்.! வைரல் வீடியோ

வீட்டுக்குள் புகுந்த கரடி - கேக் சாப்பிட்டு, நீச்சல் குளத்தில் குளித்து குதூகலம்.! வைரல் வீடியோ

Viral Video | குடியிருப்பு ஒன்றில் புகுந்த கரடி அங்குள்ள சமையல் அறையில் இருந்த கேக்-ஐ எடுத்து சாப்பிட்டு விட்டு, சாவகாசமாய் நீச்சல் குளத்திலும் ஆட்டம் போட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video | குடியிருப்பு ஒன்றில் புகுந்த கரடி அங்குள்ள சமையல் அறையில் இருந்த கேக்-ஐ எடுத்து சாப்பிட்டு விட்டு, சாவகாசமாய் நீச்சல் குளத்திலும் ஆட்டம் போட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video | குடியிருப்பு ஒன்றில் புகுந்த கரடி அங்குள்ள சமையல் அறையில் இருந்த கேக்-ஐ எடுத்து சாப்பிட்டு விட்டு, சாவகாசமாய் நீச்சல் குளத்திலும் ஆட்டம் போட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தினசரி ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து மனிதர்களுக்கு சலிப்பு ஏற்படும் பட்சத்தில் கடற்கரை, மலைகள், காடுகள் என்று இயற்கையை தேடி, தேடி செல்கின்றனர். இயற்கையின் பேரழகைக் கண்டு மனம் ஆனந்தமும், பரவசமும் அடைகிறது. உடலுக்கும் மிகுந்த புத்துணர்ச்சி தருகிறது.

குறிப்பாக வனக் காடுகள் நிறைந்த மலைப் பகுதிக்குள் சென்றுவிட்டால் அங்கு நம் கண்ணில் படும் ஒவ்வொன்றும் பெரும் வியப்பை தரும். கண்களை விரித்து எல்லாவற்றையும் ஆச்சரியத்தோடு பார்ப்போம். வீட்டில் தினம், தினம் ஷவரில் குளித்துப் பழகிய நமக்கு ஆறுகள், அருவிகளை கண்டுவிட்டால் அங்கிருந்து கிளம்புவதற்கு மனசே வராது.

சரி, மனிதன் இயற்கையை தேடி சென்றால் இவ்வளவு குதூகலமான விஷயங்கள் நடக்கிறதே, அதுபோல வனவிலங்குகள் மனிதர்கள் வாழுகின்ற ஊருக்குள் வந்தால் என்ன செய்யும்? வேறொன்றுமில்லை புதிதாய் நாம் பார்க்கும் எந்தவொரு விஷயத்தின் மீது ஆர்வம் மற்றும் குதூகலம் ஏற்படுவதைப் போல விலங்குகளுக்கும் ஏற்படுகின்றன.அமெரிக்காவில் நடந்த சம்பவம்:

அமெரிக்காவின் சிமி பள்ளத்தாக்கு பகுதியை ஒட்டிய குடியிருப்பு ஒன்றில் கரடி புகுந்துவிட்டது. அங்குள்ள சமையல் அறையில் இருந்த கேக்-ஐ எடுத்து சாப்பிட்டு விட்டு, சாவகாசமாய் நீச்சல் குளத்திலும் ஆட்டம் போட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து அந்த கரடியை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

மேலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் கரடி வந்தால், பொதுமக்கள் அதை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து ஃபேஸ்புக்கில் விழிப்புணர்வு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

Also Read : 15 வினாடிகள் தான் டைம்... இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை கண்டுபிடிக்க முடியுமா?

அந்தப் பதிவில், “சிமி பள்ளத்தாக்கு குடியிருப்பு பகுதிக்குள் கரடி புகுந்துவிட்டது. இந்த சம்பவமானது 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. கரடியை பார்த்த உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு காவலர்கள் விரைந்து சென்றனர். இதற்கிடையே, கரடி வீடு ஒன்றினுள் புகுந்து கொண்டது.

அந்த வீட்டில் இருந்த தாயும், மகனும் அச்சத்தில் படுக்கையறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டனர். இந்த நிலையில் அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்தபோது அந்தக் கரடி சமையலறையில் நின்று கொண்டிருந்தது. புதிதாக தயார் செய்யப்பட்ட கேக்-ஐ அது சாப்பிட்டிருந்தது.அதிகாரிகளை கண்டு பீதி அடைந்த கரடி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள மரத்தின் மீது ஏறிக் கொண்டது. பின்னர் தொடர் முயற்சி எடுக்கப்பட்டதன் விளைவாக மரத்தை விட்டு கீழே இறங்கிய கரடி வனப்பகுத்திக்குள் ஓடி விட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Also Read : கெத்தாக இன்ஸ்டா ரீலில் வர வேண்டும் என்று நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் - வைரலாகும் விபரீத வீடியோ.!

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று பலரும் கமெண்ட் செய்துள்ள நிலையில், சிலர் வேடிக்கையான கமெண்ட்களை குறிப்பிட்டுள்ளனர். நன்றாக சாப்பிட்டுவிட்டு மெத்தையில் உறங்க வேண்டும் என்ற எண்ணம் கரடிக்கும் இருந்திருக்கும் என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Trending, Viral Video

அடுத்த செய்தி