Home /News /trend /

இந்த வயசுலேயே என்னா தைரியம்... பாம்புடன் பயமின்றி விளையாடும் சுட்டிக்குழந்தை வீடியோ.!

இந்த வயசுலேயே என்னா தைரியம்... பாம்புடன் பயமின்றி விளையாடும் சுட்டிக்குழந்தை வீடியோ.!

Image : Instagram

Image : Instagram

Trending Video | உலகிலேயே மிகவும் இளம் வயது பாம்பு பிடிப்பவர் என நெட்டிசன்கள் புகழும் அளவிற்கு சுட்டிக்குழந்தை ஒன்று பாம்புடன் விளையாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

‘பாம்பென்றால் படை நடுங்கும்’ என்பது பழமொழி. சிறுசு முதல் பெரிசு வரை யாராக இருந்தாலும் பாம்பை கண்டால் நடுங்கித் தான் போவார்கள். காடுகளில் வேட்டையாடும் உயிர்கொல்லி விலங்குகள் பலவற்றையும் பார்த்தாலும் வராத பயம், நமக்கு பாம்பை பார்க்கும் போது மட்டும் வரும். ஏன் பாம்பு சீறும் காட்சியை வீடியோவில் பார்த்தால் மட்டுமே பலருக்கும் சிலிர்த்து போகும். அதேபோல் பாம்பு குறித்த வீடியோக்களுக்கும் இணையத்தில் பஞ்சம் கிடையாது.

ராஜ நாகத்தில் ஆரம்பித்து அனகோண்டா வரை பல்வேறு வகையான பாம்புகளின் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் நாம் பார்க்க உள்ள வீடியோ ஒன்றில், சின்னஞ்சிறு குழந்தை ஒன்று பாம்புடன் விளையாடி வருகிறது.

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், “பெண் குழந்தை ஒன்று கருப்பு நிறத்தில் நீளமாக இருக்கும் பாம்பை பிடிக்க முயற்சிக்கிறது. அந்த நீளமான பாம்பை பார்த்து பெரியவர்களே ஒதுங்கி நிற்கும் போதும், அந்த குட்டி குழந்தை பாம்பின் வாலை பிடித்து இழுக்கிறது. உடனே சீற்றத்துடன் பாம்பு குழந்தையை திரும்பி பார்க்கிறது. இதைப் பார்த்த அங்கிருந்த நபர் ஒருவர் பாம்பின் நடவடிக்கையை கட்டுப்படுத்த முயல்கிறார்”.

பாம்பு பிடிக்க வந்த சில தொழில்முறை நபர்கள் இந்த காட்சியை தங்களது வீடியோவில் பதிவு செய்துள்ளனர். பார்க்கும் போதே பகீர் கிளப்பும் இந்த வீடியோவை கண்டு ரசித்த நெட்டிசன்கள் பலரும், குழந்தைக்கு அழகான பட்டப்பெயர் ஒன்றை சூட்டியுள்ளனர். உலகிலேயே இளம் வயதில் பாம்பு பிடிக்கும் நபர் என குட்டி பாப்பாவை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். சிலரோ இப்படி குழந்தையை பாம்புடன் விளையாட விட்டு வீடியோ எடுப்பது அவசியமா? என அக்கறையுடன் கோபப்பட்டுள்ளனர்.



 




View this post on Instagram





 

A post shared by 🐍SNAKE WORLD🐍 (@snake._.world)






ஜூன் 28ம் தேதி அன்று, Snack_World என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யபட்டுள்ள அந்த வீடியோ, 4324 க்கும் மேற்பட்ட லைக்குகளை வாங்கிக் குவித்துள்ளது. இந்த வைரல் வீடியோவிற்கு கமெண்ட்களும் குவிந்து வருகிறது. நெட்டிசன்களில் ஒருவர், 'மிக அழகாக இருக்கிறது' என பாராட்டியுள்ளார். மற்றொரு நபரோ "அப்பா நான் அதை வைத்திருக்க முடியுமா! ஓ ப்ளீஸ் அப்பா” என குழந்தை தனது தந்தையிடம் கெஞ்சிக் கேட்பது போல் காமெடியாக பதிவிட்டுள்ளார்.

Also Read : மலிவான மீன்களை சாப்பிட முடியாது... அடம்பிடிக்கும் பென்குயின்களின் - வீடியோ

மற்றொரு யூஸர் "குழந்தைகள் இதைப் பார்த்து பயப்பட வேண்டாம், முரட்டுத் தனமான விலங்குகளை எவ்வாறு கையாள்வது என்பதை கற்பிப்பது சரியான வழி இது" என பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ “வாவ் என்ன ஒரு தைரியம்... அதை செல்லப்பிராணி போல் கையாள்கிறார்” என குட்டி குழந்தையின் தைரியத்தை வியந்து பாராட்டியுள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Snake, Trending, Viral Video

அடுத்த செய்தி