Home » News » Trend » WATCH VIRAL VIDEO HOW WIFE CELEBRATES HUSBANDS BIRTHDAY IN STYLE VIDEO 1 SAN

கணவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி...! வைரல் வீடியோ

கணவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி...! வைரல் வீடியோ
News18
  • News18
  • Last Updated: December 16, 2019, 4:21 PM IST
  • Share this:
பெண் ஒருவர் தனது கணவரின் பிறந்தநாளுக்கு, அவருக்கு தெரியாமல் ஆச்சரியப்படும் வகையில் பரிசுகளை கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

நம்முடைய பிறந்த நாளை விட நமக்கு பிடித்தமானவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடங்கியிருக்கும். பிடித்தமானவர்களை அந்த நாளில் மகிழ்விப்பதே ஒரு அலாதியான சுகம்தான்.

நண்பர்களின் பிறந்த நாளில் அவர்களை ஆச்சரியப்படுத்துவது வேடிக்கையும், கலகலப்பும் கலந்து இருக்கும் என்றால், வாழ்க்கைத்துணையின் பிறந்த நாளில் அவர்களை ஆச்சரியப்படுத்துவது காதலும், மகிழ்ச்சியும் கலந்து இருக்கும்.


அப்படி, ஒரு மனைவி தனது கணவரின் பிறந்தநாள் அன்று அவரை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

மனைவி தனது கணவனின் கண்களை, கைகளால் மூடிக்கொண்டு ஒரு அறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, லவ் யூ என்று விளக்கொளி மற்றும் பூக்களால் எழுதப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த கணவர், மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

மேலும், அந்த அறை முழுவதும் விளக்கு, பூக்கள், பலூன் என்று அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆங்காங்கே பரிசுகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோவை சுமார் 73 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்துள்ளனர். சுமார் 86 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.

வீடியோவைப் பார்த்த பலரும் இப்படி ஒரு பிறந்த நாள் பரிசை மனைவியைத் தவிர யாராலும் கொடுக்க முடியாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also See...

ஓரளவுக்குத்தான் பொறுமை...! திருமண மேடையிலேயே பொங்கி எழுந்த மாப்பிள்ளை - வைரல் வீடியோ

ஓர்பாலின காதலர்களின் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்! இணையம் கொண்டாடும் வைரல் புகைப்படங்கள்


Also See...
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளின் ’பவர் புல்’ புகைப்படங்கள்...!


First published: December 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading