Home /News /trend /

கிணற்றுக்குள் குதித்த பெண்ணை பத்திரமாக மீட்ட காவலர்களுக்கு பாராட்டு - வைரல் வீடியோ

கிணற்றுக்குள் குதித்த பெண்ணை பத்திரமாக மீட்ட காவலர்களுக்கு பாராட்டு - வைரல் வீடியோ

UP Police

UP Police

அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் 112 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும் என்றும், உதவி செய்ய எந்த சமயத்திலும் தயார் நிலையில் இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில், மன விரக்தியில் கிணற்றில் குதித்த பெண்ணை காவல் துறையினர் பத்திரமாக மீட்டுக் கொண்டு வரும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பெண்ணை மீட்ட காவலர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    உத்திர பிரதேச மாநில காவல் துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இது தொடர்பான பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹமிர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து விட்டார் என தகவல் வந்ததாகவும், அடுத்த சில நிமிடங்களில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்புடைய பெண் குதித்த கிணறு வறண்ட கிணறு ஆகும். அங்கு சென்ற காவலர்களில் ஒருவர் உடலில் கயிற்றை கட்டிக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கினார். பின்னர் அந்தப் பெண்ணை கட்டிலில் தூக்கி வைத்து, கயிறு மூலமாக இழுத்து மேலே கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, காவலர்களுக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.



    இந்த வீடியோவை உத்தரப் பிரதேச மாநில காவல் துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி இரவு 11 மணிக்கு அப்லோடு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து வைரல் ஆகியுள்ள நிலையில், தற்போது பலரின் கவனத்தை வீடியோ ஈர்த்து வருகிறது. நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோ லைக் செய்துள்ளனர். எண்ணற்ற நபர்கள் ரீடிவீட் செய்துள்ளனர்.

    Also Read : போட்டிக்கு நீங்களும் வரலாம்..! 8 கிலோ சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.51,000 பரிசு

    எப்போதும் அவசர உதவிக்கு தயார்

    அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் 112 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும் என்றும், உதவி செய்ய எந்த சமயத்திலும் தயார் நிலையில் இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு மாநில காவல்துறை தலைமை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : ராஜ நாகத்தை விட மிக பயங்கரமான விஷத்தன்மை கொண்ட நத்தை! இதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

    பாராட்டும் நெட்டிசன்கள்

    காவலர்களின் வீர, தீர செயல்களுக்கு நெட்டிசன்கள் மத்தியிலும் பாராட்டு கிடைத்து வருகிறது. கௌரவ் சிங் என்ற டிவிட்டர் பதிவாளர் வெளியிட்டுள்ள பதிவில், “இரவும், பகலும் பாராமல் எங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உத்தரப் பிரதேச மாநில காவல்துறை, வாரணாசி காவல்துறை இருக்கின்ற மாநிலத்தில் இருப்பது பெருமை கொள்ளச் செய்கிறது. உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    இதேபோன்று சீமா மிஸ்ரா என்ற கல்லூரிப் பேராசிரியர் வெளியிட்டுள்ள பதிவில், காவல் துறையின் வீர, தீர செயலுக்கு சல்யூட் அடிப்பதாகக் கூறியுள்ளார். காவல் துறையினரின் இதுபோன்ற சேவைப் பணிகள் தொடர வேண்டும் என்று மற்றொரு பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Trending, UP police, Uttar pradesh, Viral Video

    அடுத்த செய்தி