ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வில்லேஜ் விஞ்ஞானியான பஸ் ட்ரைவர்.. விண்டோ வைப்பருக்கு வாட்டர் பாட்டில் சிகிச்சை! வைரல் வீடியோ!

வில்லேஜ் விஞ்ஞானியான பஸ் ட்ரைவர்.. விண்டோ வைப்பருக்கு வாட்டர் பாட்டில் சிகிச்சை! வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Trending Video | உத்திர பிரதேசத்தை சேர்ந்த மாநகர பேருந்து ஓட்டுநர் உடைந்த விண்டோ வைப்பரை வாட்டர் பாட்டில் வைத்து சரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

நம் நாட்டு மக்களின் கிரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லை. கிடைக்கும் கேப்பில் எல்லாம் தன்னுடைய கிரியேட்டிவிட்டியை புகுத்தி விடுவார்கள். அதில் அவர்கள் செய்யும் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும். இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று அனைவரும் அசந்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. புதிதாக வெளியாகியுள்ளஅந்த வீடியோவில் பேருந்தின் விண்டோ வைப்பர் உடைந்து சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. அதை சரி செய்ய விரும்பிய பேருந்தின் ஓட்டுநர் அந்த விண்டோ வைப்பரில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் ஒன்றை கயிற்றுடன்கட்டி, அதனுடன் வைப்பரை இனைத்து வித்தியாசமான முறையில் சரி செய்துள்ளார்.

அதில் வேலை செய்யாத அந்த விண்டோ வைப்பரில் ஒரு கயிற்றைக் கட்டி, அதில் தண்ணீர் நிரப்பிய வாட்டர் பாட்டிலை தொங்கவிட்டுள்ளார். விண்டோ வைப்பரில் இருந்து இன்னொரு கையிற்றை தனக்கு அருகில் கைக்கெட்டும் தூரத்தில் இணைத்து வைத்துள்ளார். இப்பொழுது தன்னிடம் கட்டியுள்ள கையிற்றை இழுக்கும் போது விண்டோ வைப்பர் நகர்ந்து கண்ணாடியை சுத்தம் செய்கிறது. அதன் பிறகு அவர் கையிற்றை விடுவிக்கும் போது வைப்பரில் கட்டி உள்ள தண்ணீர் பாட்டில் எடையினால் வைப்பர் எதிர்பக்கம் கீழ் நோக்கி இழுக்கப்படுகிறது இவ்வாறு இவர் கையிற்றை இழுத்தும் விடுவித்தும் தன்னுடைய புத்திசாலித்தனத்தினால் வேலை செய்யாத விண்டோ வைப்பரையும் எப்படி பயன்படுத்துவது என்று செய்து காட்டியுள்ளார்.

இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே வைரலாகி அதிக லைக்குகளையும் குவித்து வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இணையவாசிகள் பலரும் இவரை புகழ்ந்தும் பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த பேருந்தின் நிலைமையை சுட்டிக்காட்டி உத்தரபிரதேச போக்குவரத்து கழகம் பேருந்துகளை சரியாக பராமரிப்பது இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Also Read : எனக்கு 60 அவருக்கு 30.. பழங்குடியின இளைஞருடன் அமெரிக்க பெண்ணுக்கு மலர்ந்த காதல்..!

அதில் இணையவாசி ஒருவர் “இவரின் அற்புதமான சிந்தனைக்கும் வித்தியாசமான முறையில் யோசித்ததற்காகவும் இந்தப் பாராட்டுக்கள் அனைத்திற்கும் இவர் ஏற்றவர் தான்” என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் பேருந்தின் இந்த அவல நிலையை சுட்டிக்காட்டி “உத்தரபிரதேச போக்குவரத்துக் கழகத்திற்கு இந்த வைப்பரை சரி செய்வதற்கு கூட காசு இல்லை போலும்” என்ற நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.

Also Read : உடலை வில்லாய் வளைத்து உலக சாதனை படைத்த சிறுமி.. வைரல் வீடியோ

ட்விட்டரில் இந்த வீடியோ வெளியானதும் உத்தர பிரதேச அரசாங்கத்தின் போக்குவரத்துக் கழகம், இந்த பிரச்சனையை சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Trending, Uttar pradesh, Viral Video