ஷேரியுடன் அந்தரத்தில் பறந்து ஜிம்னாஸ்டிக் செய்து அசத்திய பெண் - வைரல் வீடியோ

ஷேரியுடன் அந்தரத்தில் பறந்து ஜிம்னாஸ்டிக் செய்து அசத்திய பெண் - வைரல் வீடியோ

வீடியோ காட்சி

Viral Video | வீடியோவை பார்த்த பலர் பருலின் அசாத்திய திறமையை வியந்து பாராட்டி வருகின்றனர்.

 • Share this:
  சேலையை கட்டிக்கொண்டு நடப்பதற்கே சிரமப்படும் சில பெண்கள் மத்தயில் அந்தரத்தில் சில வினாடிகள் பறந்தவாறு ஜிம்னாஸ்டிக் செய்யும் இளம்பெண்ணின் வீடியோ பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  பருல் என்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஷேரியுடன் டைவ் அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்நதுள்ளார். ஜிம்னாஸ்டிக் உடையுடன் டைவ் அடித்து பயிற்சி செய்வதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் ஷேரியில் ஓடி வந்து துள்ளிக் குடித்து பருல் செய்யும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மிதக்க வைத்துள்ளது.   
  View this post on Instagram

   

  A post shared by Parul_Arora💫 (@parul_cutearora)
   
  View this post on Instagram

   

  A post shared by Parul_Arora💫 (@parul_cutearora)


  அந்த வீடியோவை பார்த்த பலர் பருலின் அசாத்திய திறமையை வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த ஒருவர், நான் இதை பல முறை பாரத்துவிட்டேன். அவருக்கேற்ப அவரது சேலையும் புவியிர்ப்புக்கு ஈடுக்கொடுப்பது மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கிறது என்றுள்ளார்.  பருல் ஷேரியுடன் ஜிம்னாஸ்டிக் செய்யும் மற்றொரு வீடியோவில் ஒரு முறை தொடர்ந்து 3 முறை தலைகீழாக பல்டி அடிக்கும் வீடியோவும் பகிர்ந்துள்ளார். இதுப்போன்ற அசாத்திய திறமை யாருக்கும் எளிதில் வந்துவிடாது. முறையான பயிற்சி மற்றும் தொடர் உடற்பயிற்சியின் மூலம் உடலை ஃபிட்டாக வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாக இருக்கும். பருலுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
  Published by:Vijay R
  First published: