நாய்குட்டியிடம் 'ஐ லவ் யூ' சொன்ன வெள்ளை கிளி - வைரலாகும் வீடியோ!

நாய்குட்டியிடம் 'ஐ லவ் யூ' சொன்ன வெள்ளை கிளி - வைரலாகும் வீடியோ!

நாய்குட்டியிடம் ஐ லவ் யூ சொன்ன வெள்ளை கிளி

இதயத்தை உருக்கும் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ கிளிப்பில், ஒரு அழகான வெள்ளை கிளி முதல் முறையாக சந்தித்த ஒரு நாய்க்குட்டியிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லும் கியூட் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

தனது செல்லப்பிராணிகளின் வேடிக்கையான நிகழ்வுகளை துணுக்குகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளும் வெண்டி மேரி என்ற பெண் இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார். அந்த குறுகிய வீடியோ கிளிப்பில், ஒரு பளபளப்பான கருப்பு நாய்க்குட்டி, ஒரு மனிதனின் மடியில் வசதியாக தூங்குவதைக் காட்டுகிறது.

வெண்டி மேரியுடன் தொடங்கும் அந்த வீடியோவில், அவரது கிளி ஸ்வீட் பே மற்றும் ஒரு அழகான நாய்க்குட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் வீடியோ எடுக்கும் போது கிளி அந்த நாய்க்குட்டியின் தலையை காதால் கோரி விடுவதை காண முடியும். சில நொடிகளுக்கு பிறகு, வேண்டி கிளியை பார்த்து நாய்க்குட்டியை நேசிப்பதாக கூறுமாறு கேட்கிறார். அப்போது மனிதனுக்கு பதிலளிக்கும் விதமாக அந்த கிளி , ‘ஐ லவ் யூ’ என ஆச்சரியப்படும் வகையில் கூறுகிறது. 
View this post on Instagram

 

A post shared by Wendy Marie (@the_parrot_lady)


அந்த இன்ஸ்டாகிராம் வீடியோவின் தலைப்பில், "ஸ்வீட் பே முதல் முறையாக புதிய நாய்க்குட்டியை சந்திக்கிறது"என வெண்டி எழுதியுள்ளார். இந்த வீடியோ வெளியானதில் இருந்து எண்ணற்ற லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் அன்பு நிறைந்த அனைத்து வகையான கருத்துகளையும் இந்த வீடியோ பெற்று வருகிறது. பலர், ‘வாவ்’, ‘இவ்வளவு லவ்’, கிளி - நாயின் பாசம் மிகவும் தூய்மையானது’ என்பது உள்ளிட்ட பல்வேறு கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது. இது தவிர, நிறைய பேர் ஹார்ட் எமோஜிகள், கிஸ் ஈமோஜிகள் என தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Also read... சண்டிகர் டூ சென்னை - 60 வயது நண்பர்களின் பயண அனுபவம்!

இதே வீடியோவை டிக்டாக்கிலும் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோ, டிக்டாக்கில் மட்டும் 12.5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. மேலும், வேண்டி தனது தலைப்பில், வீடியோவில் இவ்வளவு அன்பைப் பொழிந்த தனது டிக்டாக் குடும்பத்தினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். டிக்டாக்கில் இந்த வீடியோவை பாராட்டிய ஒருவர், “நான் பார்த்த மிக இனிமையான வீடியோக்களில் ஒன்று" என குறிப்பிட்டுள்ளார்.

கிளிப்பைக் கண்டு திகைத்துப்போன மற்றொரு யூசர், ஒவ்வொரு இனமும் எவ்வளவு அன்பையும், பிணைப்பையும் விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது, இந்த வீடியோ என் இதயத்தை உருக்கி என்னை அழ வைத்தது என தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வெண்டி இதுபோல எண்ணற்ற அழகான வீடியோக்களை ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: