விண்வெளியில் ஆய்வாளர்கள் எப்படி தலைக்கு குளிக்கிறார்கள் தெரியுமா? - வைரலாகும் வீடியோ

விண்வெளியில் ஆய்வாளர்கள் எப்படி தலைக்கு குளிக்கிறார்கள் தெரியுமா? - வைரலாகும் வீடியோ

வீடியோ காட்சிகள்

நாசாவின் விண்வெளி வீரரான கரேன் நைபெர்க் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று விண்வெளியில் செய்யப்பட்டதை போல் அல்லாமல் பூமியில் செய்யப்பட்டதை போல் இருந்தது,

  • Share this:
விண்வெளி என்றாலே கண்கவர் காட்சிகளால் நிறைந்திருக்கும், அதே போல் சூரிய மண்டலத்தின் பரந்த தன்மையை ஆராயும் ஒரு அற்புத தொழிலை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் உலகின் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள் ஆவார்கள்.

வான் வெளியில் இருக்கும் பலவற்றை காண கண் கோடி வேண்டும். அதற்கு நாம் முதலில் நம் பூமியை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் அது சற்றே கடினமானது. வான் பொருட்களுடன் பூமியை ஒப்பிட்டு பார்த்தால் பூமியில் உள்ள இயக்கங்கள் அவற்றின் தனிப்பட்ட திறன்களில் சவாலானவை என்றாலும், குறைந்தபட்சம் ஒருவருக்கு பூமியில் இருப்பது, அவரின் உடல் எடையை ஆதரிக்கும் ஈர்ப்பு, பல்வேறு உணவு வகைகளின் உதாரணத்திற்கு சூடான உணவை உண்ணுதல் போன்ற பல வசதிகளை பூமி உங்களுக்கு அளிக்கிறது.

ஆனால் விண்வெளியில், சாப்பிடுவது முதல் குளியலறையை பயன்படுத்துவது வரை அனைத்தும் ஒரு சவால்.

நாசாவின் விண்வெளி வீரரான கரேன் நைபெர்க் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று விண்வெளியில் செய்யப்பட்டதை போல் அல்லாமல் பூமியில் செய்யப்பட்டதை போல் இருந்தது, அது என்ன வென்றால் ஒரு விண்வெளி வீராங்கனை ஒருவர் தனது தலையை ஷாம்பு கொண்டு கழுவுகிறார் அதுவும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள்.

இந்த வீடியோவைப் பார்த்த பலருக்கும் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருந்தது. இந்த வீடியோவை யாரோ Redditல் பகிர்ந்த பொது தான் இதை பற்றிய பேச்சு பரவலாக எழுந்தது.இது மிகவும் சுவாரஸ்யமானது. வீடியோவில் வீராங்கனையின் உச்சந்தலையில் சிறிது தண்ணீரைக் கொட்டுவதிலிருந்து தொடங்குகிறது, அதில் சில சிதறுகின்றன, அவள் அவற்றை சேகரிக்க முயற்சிக்கிறாள். நீர், மற்ற வளங்களை போலவே, விண்வெளியில் விலைமதிப்பற்றது. அவர்கள் பூமியிலிருந்து விண்கலத்திற்கு எடுத்துச் சென்றதை மட்டுமே வைத்திருக்கிறார்கள்.

பின்னர் வீராங்கனை தன் தலையில் ‘no-rinse’ ஷாம்புவை கொண்டு, பின்னர் ஒரு துண்டை பயன்படுத்தி அதைப் துவட்டுகிறார். தண்ணீர் தலையை தாண்டி ஓடாமல், தலைமுடி மற்றும் உச்சந்தலையில் இருந்து வரும் அழுக்கை துண்டின் உதவியுடன் தேய்க்க வேண்டியது எப்படி என்று வீராங்கனை கேமராவிடம் சொல்கிறார்.
Washing hairs in space from r/Damnthatsinterestingவீடியோவில் இந்த நிகழ்வு 98,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.
Published by:Vijay R
First published: