அன்றாட வீட்டு வேலைகளை செய்வது பலருக்கு சோர்வாக இருக்கும், எனவே சமீப காலமாக பெரும்பாலானோர் வீட்டு வேலைகளை சுவாரஸ்யமானதாக மாற்ற பல்வேறு வழிகளைத் தேர்வு செய்கின்றனர்.
சிலர் வீட்டில் இசை மழையை பொழிகிறார்கள், அல்லது சலவை செய்வது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்யும் போது நடனமாடியபடியே செய்ய விரும்புகிறார்கள். இப்படி செய்பவர்கள் தங்களது கியூட்டான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு பெண் நடனமாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் , தனது தந்தையுடன் சேர்ந்து வீட்டு வேலைகளை வேடிக்கையாக செய்துள்ளார். தந்தை-மகள் வேடிக்கையான செயல் அடங்கிய வீடியோ கிளிப் தற்போது வைரலாகி வருகிறது.
டிஜிட்டல்கன்டென்ட் கிரியேட்டரான பவ்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் தனது தந்தையுடன் குறும்புத்தனமான விஷயங்களை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் கேப்ஷனில், எனது அம்மா 10 நாள் பயணமாக வெளியூர் சென்றுள்ள நிலையில், தந்தையுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தந்தை-மகள் வீட்டை கவனித்து வரும் நிலையில், வீட்டை சுத்தம் செய்யும் போது வேலைகளுக்கு இடையே வேடிக்கையாக பாடுவது போன்ற வீடியோவை பதிவு செய்துள்ளனர். அதில் அவர்கள் வீட்டை சுத்தம் செய்த கையோடு வீடியோ எடுத்திருப்பது தெரிகிறது. இப்போது தனது முழு வீடும் ஏர் ஃப்ரெஷனர் கொண்டு புத்துணர்ச்சியாக இருப்பதாக உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also read... கால்பந்துடன் மூன்வாக் செய்த கயானா இளைஞர் - கின்னஸ்ஸில் இடம்பிடிப்பு!
மேலும் அந்த வீடியோ கிளிப்பில், தந்தை-மகள் இருவரும் பல வண்ண விளக்குகள் கொண்ட ஒரு அறையில் சன்கிளாசஸ் அணிந்திருப்பதைக் காணலாம். பிரபலமான பாடலான ஜோஹ்ராஜபீனை உதட்டை ஒத்திசைக்கும்போது மைக்காக வீட்டை சுத்தம் செய்யும் மாப்பை பயன்படுத்தியுள்ளனர். இந்த ஜோடி படத்தின் நடிகர்கள் சுனியல் ஷெட்டி மற்றும் அக்ஷய் குமாரின் நகர்வுகளையும் வெளிப்பாடுகளையும் பிரதிபலித்தது. வீடியோ முழுவதும் அவர்கள் துடைப்பத்தை மைக்காகவும், ஏர் ஃப்ரெஷனரையும் கையில் வைத்துள்ளனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர், 500க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் கிட்டத்தட்ட 50 கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.
இந்த வீடியோ ‘அழகாக’ மற்றும் கிரேசியாக’ இருந்தது என்று பலரும் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். சிலர் அப்பா - மகளுக்கு வாழ்த்துக்கள் கூறி இருந்தனர். மற்றொருவர் அந்த அப்பாவின் நடன நகர்வுகளை பாராட்டி, அவரை ‘சூப்பர் கூல் அப்பா’ என்று அழைத்தார். இதேபோல ட்விட்டரில் இந்த வீடியோ 16000க்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1600க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. ஏராளமானோர் இவர்களது குடும்பம் மிகவும் அழகாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.