Home /News /trend /

கோவில் சுவரின் வெண்டிலேஷன் துளை வழியாக புகுந்து திருடிய நபர் - பாதியில் மாட்டிக் கொண்டு அலறல்!

கோவில் சுவரின் வெண்டிலேஷன் துளை வழியாக புகுந்து திருடிய நபர் - பாதியில் மாட்டிக் கொண்டு அலறல்!

Robbery

Robbery

Viral Video | கர்ம வினைப் பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி கேட்கும்போது, அதன் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறதா? இல்லை என்றால் இந்தச் செய்தி உங்களுக்கானதே. அதுவும் கர்ம வினைப் பயனின் விளைவுகள் உடனடியாக நிகழ்ந்திருக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காஞ்சிலி தாலுகா ஜடிமுடி கிராமத்தில் ஜாமி ஏலம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் உள்ளன. இதையறிந்த திருடன் ஒருவன், கோவிலின் சுவரில் வெண்டிலேஷனுக்காக விடப்பட்டிருந்த துளையை சற்று பெரிதுப்படுத்தி, அதன் வழியாக உள்ளே நுழைந்தான்.

ஆபரணங்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் அதே துளை வழியாக வெளியேற நினைத்தபோது பாதி உடல் சிக்கிக் கொண்டது. எவ்வளவோ முயற்சி செய்தும், அதை விட்டு வெளியேற இயலவில்லை.

பொறுமை இழந்த நிலையில், திருடனே வாய் விட்டு கதற ஆரம்பித்து விட்டான். உதவி கேட்டு அலறுவதைக் கண்ட அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து திருடனை பத்திரமாக மீட்டனர். மிகுந்த களைப்புடன் இருந்த திருடனுக்கு சிலர் குடிக்கத் தண்ணீர் கொடுத்தனர். பின்னர் காவல் துறையினரை வரவழைத்து, திருடனை அவர்களிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். கோவிலில் திருடிய நபரின் பெயர் பாபாராவ் என்று தெரிய வந்தது. அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கடந்த 5ஆம் தேதி நிகழ்ந்துள்ளது.

பாபாராவ் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மது அருந்துவதற்கு பணம் இல்லை என்ற சூழலில், அவர் கோவிலில் திருடுவதற்கு முடிவு செய்திருக்கிறார். ஆனால், திருட்டு முயற்சி பாதியில் தோல்வி அடைந்த நிலையில், தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். திருடன் கோவில் சுவரில் சிக்கியிருந்தது குறித்த வீடியோவை சூர்யா ரெட்டி என்ற பத்திரிகையாளர், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



இந்த திருட்டு முதல்முறை அல்ல....

மது வாங்குவதற்கு பணம் இல்லாமல் பாபா ராவ் திருட்டுச் செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னதாக, தனது தாயாரின் இல்லத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை திருடி பாபா ராவ் விற்பனை செய்ய முயற்சி செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Also Read : எரியும் வீட்டிலிருந்து குழந்தையை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்த காவலர்

அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த சம்பவம்

திருடன் பாதியில் மாட்டிக் கொள்ளும் சம்பவம் அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்திலும் நிகழ்ந்தது. அங்கு வீடு ஒன்றின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடன், விலை உயர்ந்த ஆபரணங்கள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டான். கிளம்பும் சமயத்தில் பசி உணர்வு வந்துவிட்ட நிலையில், அதே வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு கிச்சடி சமைக்கத் தொடங்கினான். இதற்கிடையே வீட்டு உரிமையாளர்கள் வந்து விட்ட நிலையில், அந்தத் திருடன் கையும், களவுமாக சிக்கிக் கொண்டான்.
Published by:Selvi M
First published:

Tags: Robbery, Thief, Trending, Viral Video

அடுத்த செய்தி