Home /News /trend /

பறவைகளின் குழந்தைத் தனம் இது... மெய்மறந்து பார்க்கத் தூண்டும் வீடியோ..

பறவைகளின் குழந்தைத் தனம் இது... மெய்மறந்து பார்க்கத் தூண்டும் வீடியோ..

ட்விட்டரில் பகிர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி

ட்விட்டரில் பகிர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி

குழந்தைத் தனம் கொண்ட மனிதர்கள் நட்பு வட்டாரத்தில் இருந்தாலும் சரி , குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும், அலுவலகத்தில் ஒருவர் இருந்தாலும் நாளும், பொழுதும் செல்வதே தெரியாது. அவ்விதம் குழந்தைத் தனம் கொண்ட ஒரு கூட்டமே இங்கு உள்ளது.

    குழந்தைத் தனம் என்பது மனிதர்களிடத்தில் கண்டறிதல் அழகு. அதுவும் பறவைகள் இடத்தில் அவற்றை கண்டால் பேரழகு இதனை இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    குழந்தைத் தனம் கொண்ட மனிதர்கள் நட்பு வட்டாரத்தில் இருந்தாலும் சரி , குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும், அலுவலகத்தில் ஒருவராக இருந்தாலும் நாளும், பொழுதும் செல்வதே தெரியாது. அவ்விதம் குழந்தைத் தனம் கொண்ட ஒரு கூட்டமே இங்கு உள்ளது. ஆனால் மனிதர்கள் அல்ல பறவைகள். பறவைகள் சில கூட்டமாக இருந்து கொண்டு கடற்கரை அலைகளோடு விளையாடி மகிழும் காட்சி ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.வி.ராவ் தனது ட்விட்டரில் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், கடலில் அலைகள் வரும் போது பறவைகள் பின்னோக்கி ஓடுவதும், அலைகள் கடலின் உள்ளே செல்லும் போது பறவைகள் அலைகளை துரத்துவது போலவும் கூட்டமாக இருந்து கொண்டு விளையாடி மகிழ்கின்றது. இந்த வீடியோவின் தலைப்பில் இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.வி.ராவ் பதிவிட்டுள்ள பதிவில், விளையாடும் குழந்தைகள், உன்னால் முடிந்தால் என்னை பிடி என பதிவிட்டுள்ளார்.



    இதே போன்று இயற்கையின் படைப்பில் உள்ள அதிசய வீடியோ ஒன்றையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பார்ப்பதற்கு மரத்தில் நன்கு வளர்ந்த செழித்த இலை ஒன்று நாளடைவில் உதிர்ந்து கீழே விழுந்து கிடப்பது போல் தோன்றுகின்றது.



    சிறிது நேரம் காத்திருந்து கவனித்தால் அது இலை அல்ல வண்ணத்து பூச்சி என்பது தெரிய வருகின்றது. இயற்கை பேரழகு எனும் தலைப்பில் இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Trending, Viral Video

    அடுத்த செய்தி